முருகன் App
மயிலம் சுப்பிரமணியர் துதியமுது
கனக. சுப்புரத்தினம் (பாரதிதாசன்)
நூல்6 / 17
மயிலம் சுப்பிரமணியர் துதியமுது · கனக. சுப்புரத்தினம் (பாரதிதாசன்)

நூல்

பல்லவி✓
பாலசந்த்ர சேகரா என்ற மெட்டு இராகம்: சங்கராபரணம் தாளம்: ரூபகம்
பாலசுப்ர மண்யனே
நீலமாமயில் மேலுலாவிடும் பால
அனுபல்லவி✓
ஞாலமீதினில் அமுதச் செந்தமிழ்
நலமுதவிய பொதிகையிலமர் குறுமுனிவ னுக்கினி தருள்செயும் (பால)
சரணம்✓
வேலு மயிலும் கோழிக் கொடியும்
விரவிய அன்பர் உளமார் வாழ்த்தும்
கோல வாயிதழ்க் கொடி யிடையினர்
குலவு பாங்கும் கண் டின்பங் கொளக்
கோரிடுமிப் பாலன்மனத் தாவல் கெடச் சேவை தர
நேரிடுமோ நாளுமிமை யோர்பணியுங் காவலனே
நித்தமு னைப்பணி பத்தியெ னக்கிலை எனவிடுவாயோ
நித்தா சுத்தா அத்தா முத்தா
நினதொருபுகழ் தனைமொழிந்த
அருணகிரிக் கருள் புரிந்த (பால)
✓
கீரன் துயரம் நீக்கத் தண்ணிய
கேடில் பூம்பதம் தந்த புண்ணிய
பூரணா புவனாதி யண்டம்
புரந்திடுங் கந்தா சிந்தாகுலம்
போக்கிடுதல் உனக்கரிதோ தாய்க்கு மகன் முழுப்பகையோ
யார்க்கிதில் நீ பயப்படுவாய் ஆக்கியழித்தருள் முதலே
அக்கணி முக்கண னுக்கினி தித்ப்ரண வப்பொருள் ஓதும்
நாதி ஆதி சோதி யாதிங்
கடிமல ரினைவிட ஒருகதிபடி மிசையுளதோ உரைததி
✓
தேவரைச் சிறைமீட்க ஆங்குச்
சென்றுமை யிடம் சக்தி வாங்கித்
தாவிச் சூரனூர் வீர வாகுவைத்
தூது போக்கிப் போர்க்குண் டாகிய
சயமுர சடிபட அமரர்கள் சயசய வெனுமொலி திசையுறப்
புயவலி யசுரரை எதிர்கொடு புகையொடு கனலெழ இருபுடை
புக்கவ ரிற்புய மொக்கள திர்த்துடல் வெட்டின ரிடையே சூரன் மார்பின் மேலுன் வேலைத்
தொடுத்தவன் குலத்தொடு மடித்திடு
சுரர்க்கதி பதியுனக் கடைக்கலம் (பால)
11✓
நாழிகை அரை யேனும் சகியேன்
நச்சுப் பொய்கையன் றோ இப் பூமி
தாழ்குழல் தன மாதர் கண் எனும்
தடுக்கொணாக் கூர் வாள் என் மீ தினில்
தாக்க நலிந்தேன் பிணிகள் மாய்க்க நினைந்தன பொருள்கள்
போர்க்கு வளைந்தன மனிதர் போக்கி லிழிந்தார் எதிரே
புறப்பட் டிருட்டில் திருட்டில் கயிற்றைக் கழுத்திற் கருநமன்
வீசா முன்னை ஈசா என்னை
விரைந்து வந்திடு சுப்புரத்தினம் சொல்
நறுங்கவிக் கிரங்கி யருள் புரியும் (பால)