முருகன் App
மயிலம் சுப்பிரமணியர் துதியமுது
கனக. சுப்புரத்தினம் (பாரதிதாசன்)
நெஞ்சுக் குறுதி கூறல்11 / 17
மயிலம் சுப்பிரமணியர் துதியமுது · கனக. சுப்புரத்தினம் (பாரதிதாசன்)

நெஞ்சுக் குறுதி கூறல்

இராகம்: இந்துஸ்தான் பியாக் தாளம்: ஏகம்
✓
கெடுதலைச் செய்யும் அசுரர்கள் தம்மைப் படுகொலை செய்யும் வயிரவேல்
கீர்த்திகொள் புயம் தூக்கியபடி குகன் எழுந்தனன் மயிலின்மேல்
சுடுமணற்பொரி யறுமுகனைத்
திரிபுர மெரித்தவன் மகனைத்
தொடுகழற் பணிவாய் மனமே
விடுதலை இனி விடுதலை எங்கும் (கெடு)
✓
நிதம் தரும் சுகம் அவன் மலர்ப்பதம் எனநினைத்திடு நெஞ்சமே
நிசத்தினி லந்தச் சுரர்க்கதிபதி தனக்கு நீயென்றும் தஞ்சமே
சதுர்முகத்தனைத் தோற்கடிக்கும்
ஷண்முகனே காப்புனக்கே
அதர்ம மிங்கினித் தலையெடாது
சுதந்தரம் இனிச் சுதந்தரம் எங்கும் (கெடு)
✓
சமயம் வருதல்மெய் எனதுறவினர் சரவணபவ ஓம் எனச்
சாற்றினர் பகை நாற்புறம் வளைத்தே நொறுக்கிடு வோமினிக்
கையில் அவனருள் உண்டு கண்டாய்
கந்தன் படைச்செங் குந்தர் களாய்த்
துயர் ஒழித் தெழுவோ மினிமேல்
பயமிலை குலம் உய்யும் உய்யும் உய்யும் (கெடு)
18✓
மலையெனப்பெரு முடலெடுத்திடு கிரவுஞ்சனுயிர் மாய்ப்பவன்
மயில நற்றல மதிலிருந்துநம் குலமுழுவதுங் காப்பவன்
தலையணிந்தவன் குருவுமவன்
சகல உயிர்க்கும் வேருமவன்
நிலையெனது சொல் பார்மனமே
புலையும் மறமும் தொலையும் தொலையும்(கெடு)