முருகன் App
மயிலம் சுப்பிரமணியர் துதியமுது
கனக. சுப்புரத்தினம் (பாரதிதாசன்)
மயில்16 / 17
மயிலம் சுப்பிரமணியர் துதியமுது · கனக. சுப்புரத்தினம் (பாரதிதாசன்)

மயில்

இராகம்: அசாவேரி தாளம்: சாப்பு
28✓
குகனேறும் மாமயிலே — ஷண்
முகனேறும் மாமயிலே
குளிர்வா னிடையே குவிதா ரகைபோ
லொளிர் தோ கையிலே சுடர்கா சுக ளார் (குக)
இறகின் விரிவிங் ககிலம் ககனம்
பிறவும் புகஅங் கிடமின் றெனுமென் (குக)
நவரத் தினமுற் றிடுபொற் பணிபெற்
றுயர் நர்த் தனமிட் டபதத் துடனற் (குக)
கொந்திடும் சஞ்சலம் கண்டதும் சென்றிரும்
கந்தரம் தன்வணம் சுந்தரம் சிந்துறும் (குக)
அணி வயிரவலகு தலைமிசை எழில் முடி
மணியென ஒளிவிழி மரகத மலைநிகர் (குக)
மணிமா முடிமீ தினி னீள் உலகே
அணிசே டனைஓர் புழுவா யெணுவாய் (குக)
மயிலமே உரைகுரா திப எனாதெ திரில்வா
வெயிலிலே புழுவெனா உருகினே னருளவா (குக)
சுப்புரத் நத்தினற் சொற்குவப் புற்றெனக்
கிக்கணத் திற்குகத் தைக்கொடுத் துக்கொணற் (குக)