முருகன் App
மயிலம் சுப்பிரமணியர் துதியமுது
கனக. சுப்புரத்தினம் (பாரதிதாசன்)
தலைவி தூதுபோக்கல்7 / 17
மயிலம் சுப்பிரமணியர் துதியமுது · கனக. சுப்புரத்தினம் (பாரதிதாசன்)

தலைவி தூதுபோக்கல்

பல்லவி✓
தேவகி மைந்த னான கண்ணனைத் தேடுவோம் என்ற மெட்டு இராகம்: இந்துஸ்தான் பியாக் தாளம்: ஏகம்
வானவர் போற்றும் வேலவனிடம்
மாது நீ ஓதடி (வா)
அனுபல்லவி✓
மா மயிலா நன் மலையிற் சென்று வஞ்சின்என்னிலை தன்னை இன்று (வா)
சரணம்✓
நானவனுக்கும் அவனெனக்குங் கட
னாவதென உண்டு—சாசனம்—அதற்
கேனில்லை இன்னும்வி மோசனம்—என (வா)
✓
தாள முடிவதில்லை முருகன்மேல்
தைய லெனக்குள்ள காதலை—மத
வேளின் கணைபட்டுச் சாதலை—அந்த (வா)
✓
ஆதியிலே செட்டி வீதியிலே சொன்ன
சேதி யெல்லாம் உள்ளம் மறந்ததோ—உன்
சாதியில் இக்குணம் பிறந்ததோ—என்று (வா)
✓
பாசி மயில்மிசை மாசி மகத்தன்று
நேசியருடன் நீ வந்தனை—நின்று
பேசிடில் நேருமோ—நிந்தனை—என (வா)
✓
வாதனை தீர மணப்பதின்றி யின்னும்
சோதனை செய்திட வேண்டுமோ—இந்த
மாதுபிறன் கையைத் தீண்டுமோ—என (வா)
12✓
கைப்பிடியிற் கொண்டுவர குகனை—நயம்
காட்டியோமையல் கூட்டியோ
சுப்புரத்தினம் சொல் நீட்டியோ—அடி (வா)
13வண்ணம்✓
மருவே செறித்த என்று மெட்டு
மயிலா சலத்து முருகா எனக்கு
வரமே யளிக்க நினையாயோ
மயலார் தடக்கண் மடவார் தனத்தில்
மனதே செலுத்தி யழியாமே
வெயிலே துடித்த புழுவாகி நித்தம்
விஷயாதி கட்குள் உழலாமே
விரைவே சுழற்று நமனார் கயிற்றை
யுடலோ டுசுற்றி யழையாமே
மயில்மே லினிக்க வருவாய் சுரர்க்கி
னமுதே பரைக்கு மகனே நீ
மலரே நிகர்த்த பதநீழ லுக்குள்
வகையே சுகிக்க அருள்தாராய்
வயவே லெடுத்த அறுமா முகத்து
வலனார் புயத்து மகிபா சீர்
வனமார் கொடிக்கண் மகவான் மகட்கண்
விளையா டியிக்கண் வருவாயே 13