முருகன் App
மயிலம் சுப்பிரமணியர் துதியமுது
கனக. சுப்புரத்தினம் (பாரதிதாசன்)
தலைவி பாங்கியிடம் கூறல்9 / 17
மயிலம் சுப்பிரமணியர் துதியமுது · கனக. சுப்புரத்தினம் (பாரதிதாசன்)

தலைவி பாங்கியிடம் கூறல்

இராகம்: சங்கராபரணம் தாளம்: ஆதி
பல்லவி✓
மனமிருந்தால் வரலாம் மயில்வாகனன்
வந்தெனக்கின்பம் தரலாம்—என்
அநுபல்லவி✓
இனமே நம்பினேன் இல்லை
எல்லாம் மறந்தேன் தில்லை
வனநாதன் மகன் மேலே
வைத்தேன் மோகமக் காலே (மனமி)
சரணம்✓
புனையுங் கடப்பந் தாரும்
புன்னகை செய்யும் சீரும்
நனையும் மலர்க்கண் ணோரம்
நல்லரு ளோ அ பாரம்
✓
எனையாளத் தகுமென்றே இவனை நம்பினேன் அன்றே
மனைமாருந் தானுமாகி மறைந்தான் மயிலமேகி (மனமி)
✓
அன்று வந்தாற்போல் வந்தான்
அரைநொடியில் மறைந்தான்
நன்றோ அவன் செயல் தான்
நாலா விதத்தும் கந்தன்
16✓
குன்றென்று நினைத்தென்னைக் கொடுமை புரிந்தான் முன்னைச்
சென்று குறப்பெண் ஈயும் தேன்மாவுண்ட தோஞாயம்(மனமி)
அந்நாள் முதலிந் நாளாய்
அவன் மோகமே கூர் வாளாய்
மின்ன லிடையைத் தூளாய்
வீசுதென் குறை கேளாய்
கன்னியவன் தெரிந்தே கருவில்வைத்தான் மருந்தே
அன்பன் சுப்புரத் நம்பண் இன்றேல் தேற்றுவார் ஆர்பின் (மனமி)