முருகன் App
மயிலம் சுப்பிரமணியர் துதியமுது
கனக. சுப்புரத்தினம் (பாரதிதாசன்)
நகரச் சிறப்பு4 / 17
மயிலம் சுப்பிரமணியர் துதியமுது · கனக. சுப்புரத்தினம் (பாரதிதாசன்)

நகரச் சிறப்பு

9✓
இராகம்: தேசிகதோடி தாளம்: ஆதி
கொட்டுமது சீதளக்க டப்பமலர் தோளுறத்தரித்த முரு கோனமர்ப்ர
சித்த மயிலாசலந கர்ப்புகழை யோதிடற்கு
நற்றிற மில்லை சேடனி னைக்கினுந் தொல்லை
அட்டதிசை யோடிவிண்மு கட்டினையு மோதிரவி
வட்டமுமி டாதுயுக முற்றினும் விழாதபடி இட்ட நகர் மாலையெனக்
கட்டு மதிலும் அதனைச் சுற்றியகழும்
மின்னுமணிக் கோபுரங்க ளின்சிகர மீதணிந்த
பொன்னுடைநி கேதனங்கள் விண்ணகரின் மாதர்தமை
இந்நகரில் வாருமென ஆடியழைக்கும் அவரை ஓடி யிழுக்கும்
வெள்ளிமலை போலுயர முள்ளபல மாளிகையிற்
புள்ளுலவு நேரமதில் அள்ளிமணி யாலெறியும்
பிள்ளைகள் உலவுமந்த வீதிப்பெருமை அதனை ஓதலருமை
சித்திரங்கொள் ஆலயத்தில் உற்றமுரு கேசனுக்கு
நற்றிருவி ழாவைபவ மெத்தவுறு நாலுவரு
ணத்தவரின் வீதிதனில் கீதமுழக்கம் அதிக வேதஒழுக்கம்
பூரண கும்பங்கள் வைத்துத் தோரண மலங்கரித்து
நாரின் விளக்கங் கொளுத்து வாரிலக் கிழத்தியர்க்கு
நாரணன் கொளுந்திருவை ஒப்புரைத்தனன் கனக சுப்பு ரத்தினம்