முருகன் App
மயிலம் சுப்பிரமணியர் துதியமுது
கனக. சுப்புரத்தினம் (பாரதிதாசன்)
மனதுக் கினிதுரைத்தல்8 / 17
மயிலம் சுப்பிரமணியர் துதியமுது · கனக. சுப்புரத்தினம் (பாரதிதாசன்)

மனதுக் கினிதுரைத்தல்

இராகம்: அடாணா தாளம்: ரூபகம்
பல்லவி✓
குமரனை நினை கோலமாமயில் (கும)
அநுபல்லவி✓
உமையவள் தரும் பாலசுப்ரமண்யன்
உலகத் தெதிரிற் றரிசித் தருளைப் பெறவுற் றிடுமக் (கும)
சரணம்✓
மணியும் துகிலும் கரியும் பரிவும் சுவையும் புவியிங்
கெவையும் தினையும் தனியுன் கூடவராவாம்
வளமிக் குளநற் களியும் இளமைப் பருவப் பயனும்
வளர்கட் டுடல்மட் கலமும் விடுதராவாம்
துணைபோ லணியா பரணா தியினால் மயலே தருமா
தரைநீ யடைவா யெனிலோ அதனால்
துயர் துயர் துயர் (கும)
✓
குளிமதி அறுமுகம் ஒழுகிய அருளினைத் தெளிதமி ழினிலொரு
துதிகவி உரைசெயச் சொரிபவன் ஆன பெருமான்
கோரிய கீரனி னார்துயர் தீரமுன் ஓடியவேலவ
னாமுனை ஆளவு நேரினில் ஓடிவருவான்
குகன் கடம் பணிந் தவன் பதம் பணிந் ததும் பவம்
பறந்திடுமே பறந்திடுமே பறந்திடுமே (கும)
✓
போதன்தனை ஓதுஞ்சிறை போகும்படி ஏவுங்குரு
நாதன்வடி வேலன்புகழ் பாடுநெஞ்சே
பொய்ப் பகட்டை விட்டுச் சுப்பு ரத்தினத்தி
னற்றமிழ்ப்பண் செப்பியப்பன் மெய்ப்பதத்தைத் தேடுநெஞ்சே
புலப்படும் பொருள் நசித்திடு மதில்
கலப்புற இனித் தலைப்படுவதைத் தொலை
14✓
ததியடைந்தி டப்பனைத்
ததியடைந்தி டப்பனைத்
ததியடைந்தி டப்பனைக் (கும)
15✓
தினந் துதிப்பாய் நெஞ்சே என்ற மெட்டு இராகம்: செஞ்சுருட்டி தாளம்: ஆதி
பிரமனை ஐயித்தகந் தர வரம் தந்தாள்
அரனருள் மகனே அரியின்ம ருகனே (சரண)
சரணமல்லால் துணை ஏது மண் மீது
ஷண்முக வடிவே சதுர்மறை முடிவே (தாயும்)
தாயுந்தந் தையுமென வந்துள்ளு வந்து
தாவினோம் வாராய் சஞ்சலம் தீராய் (சாயும்)
சாயும் கிழவனென வனத்திலோர் தினத்தில்
தனி வள்ளி தோளே தரச்செய்யும் வேளே (கீர)
கீரனுக் கருளிய வீரா மயூரா
கீர்த்திகொள் வேலா காத்தருள் மூலா (சூர)
சூரன்கி ளையோடன்று தீர்த்தருள் மூர்த்தி
சுப்புரத்தினம் தரு ஒப்பிடும் சிவகுரு (பிர)