வீழ்தலும் யாம் வாழ்தலுமே வேலவா உன் கையி லுண்டு
வீணில் நாங்கள் பட்ட தெல்லாம் சொல்லவோ — நின்பால்
வேண்டி நிற்ப தெல்லாம் இன்ப மல்லவோ — இந்த
ஆழ்கடல் புவிமே லெமக்கினி
தான பாரத பூமியை நீ
அட்ட திக்கும் போற்றும் வண்ணம் ஆக்குவாய் — வானில்
எட்டவே உரிமைக்கொடி தூக்குவாய்
பாழ்படச்செய் தாரிந்நாட்டை ஊழ்வினைதானோ அறியேம்
பாரதத்தார் கொத்தடிமை ஆயினார் — சிலர்
பசி தொலைக்க வேறு தேசம் போயினார் — அந்தோ
ஏழ்கடல்செலும் கீர்த்தி போயின
தீனர் யாமெனும் பேருமாயின
திக்கணம் கடைக்கண் பார்த்தால் ஓர்நொடி — தனில்
எங்குலப் பகையனைத்தும் மண்பொடி
மாக்கடல் நீர் தீப்படக்கை வேல்விடுங் கந்தனே உன்னை
வழிபடும்போதும் குறை நேர்வதோ — வீரர்
மனதிலும் பொல்லாத சோர்வு சேர்வதோ — கெட்ட
வறுமை நோய்கள் அச்ச முதலாம்
வழிமறிக்கு மிக் கலி தவிர்த்தினி
வர விடாதே எமது நாட்டிற் கெடுதலை — ஈக
வாழ்க்கையில் நல் வாழ்க்கையாகும் விடுதலை