மயிலம் சுப்பிரமணியர் துதியமுது
கனக. சுப்புரத்தினம் (பாரதிதாசன்)
நெஞ்சுக்குத் தெளிவு கூறல்14 / 17
மயிலம் சுப்பிரமணியர் துதியமுது · கனக. சுப்புரத்தினம் (பாரதிதாசன்)
நெஞ்சுக்குத் தெளிவு கூறல்
இராகம்: நாட்டை தாளம்: ரூபகம்
✓
வனிதையர் தரு சுகமது பெரிதா நெஞ்சேயுரைசெய்
தினமடியரை யடை வது பெரிதா
கனமையல் தன்னில் அழுந்தல் சுகமா
கலைகொண்டவிவே கமதைத் தொலையப் புரிவது சுகமா (வனிதையர்)
24✓
மகளிர் ஊட வருந்தல் இனிதோ?
மயிலவன் கழல் வாழ்த்தல் இனிதோ?
தொகைப் பொருள் நிலம் உடன் வருமோ?
தூய்மைப் படவே நீ செயும் ஓர் நற்றவமே வருமோ?
கற்பக நீழற் குளிர் ஓர் பால் — அரம்பையாதி
பொற்புடையார் நற் களி ஓர் பால் — சுரர் மனிதர்
ஒத்தெவரும் சொற்புகழ் ஓர் பால் — தினம் புசிக்கும்
புத்தமுதத் திற்சுவை ஓர் பால் — மிகவேதுலங்க
ஜரா வதமதன் பிடர்தனில் அமர்வுற அமரரும் முனிவரும்
கைதாம் தொழுதிட ஒருகுடை அழகுடன் நிழலிட அனையதோர்
இந்திர போகம் தரிலோர் முந்திரிநே ரந்தனில் வீ
ழுந்தரமாம் சொந்தமுள தோ? — அந்தங்கடைதீர்
கந்தனையே சிந்தைசெயின் எந்தவித முந்தனியா
நந்தமதிற் சங்கையுளதோ? — அருளாலென் அப்பன்
உலகத்தினை உண்டாக்கிடல்
உலகத்தையிர க்ஷித்திடல்
உலகத்தை மறைத்திடல்இப்
பலபற் பல அற்புதமிடு
கங்கைவைத்த வான்சடைமேல் திங்கள்வைத்து மங்கையையோர்
பங்கில்வைத்தவன் மகனைக் — குற
நங்கையணை மார் பகனை — ஷண் முகனைக் — குகனை
இப்பவத்தினைத் தொலைத்திட இமையளவும் உளமலைவறச்
சுப்புரத்தி னத்தி னற்ப தத்தினின்று திப்பதைவிட(வனிதையர்)
✓
உளமொத்த ஒருவனிடம் ஒருத்தி போகம்
விளைவித்த விந்துசுரோ ணிதமேற் பாயக்
களிமொய்க்க அவள்வயிற்றில் கருநிறைந்து
வளர்பத்து மாதத்தில் மதலையாகி
துரிதம்✓
மலர்புவி தனிற் பிறந் தனுதினம் பிணிகளில்
உலவியைத் துவயதை யடையுமிச் சிறுவனைத்
திருவுளத் தெண்ணா — திருந்தால்
செய்வ தேதெண்ணா! — உமையாம்
பரை தருந் தேனே — மயில்மேல்
பவனிவரு வோனே — என்கோனே
கஜல்✓
குருவையடைந் துயர்கலைகள் கற்றுத் தக்க
பருவமுறு மங்கையர்கள் மோகம் கொள்ளும்
உருவமொடு திருவனையாள் தனைமணந்து
மருவிடுக கோததியில் ஆழ்ந்து பின்பு
துரிதம்✓
வளநிதி வருவித மதில்மன தினைவிட
விளைவன கெடுதி கள் பலபல வாகுமிந்
நலியினாலுருகா — திருக்கும்
நிலையருள் முருகா! — தமிழ்த்தேன்
குலவுமலர் வாயா! — என்நேயா!
குளிர்செய் காங்கேயா! — நற்றூயா!
கஜல்✓
வாலிபம்போய் வலிவெலாம்போய் நரைமிகுத்துக்
காலிருந்த இடநோக்கித் தலையும்சாய
மூலைவிட்டு நகர்வதெனில் முனைந்துகையிற்
கோலையெடுத் தூன்றநடை கோணிவீழச்
துரிதம்✓
சிறுவய தினரிதை நகைபுரி கையில்மன
முறுசின மதில்வசை மொழிவர் இவை பலவும்
வருவதன் முன்னே — நின்பார்வை
வசத்திலாக் கென்னை — கயிலா
புரியினோன் பாலா! — நன்மூலா
பூணுங் கதிர்வேலா! — நற்சீலா
கஜல்✓
நாச் சற்றும் நிலைநிற்க மாட்டாது நனிகுழறப்
பேச்சற்று விழியினிலே ஒளியற்றுப் பிரக்ஞையற்றுப்
போச்சுதுயிர் எனஉற்றார் பிடிப்பற்று வாடுமுடல்
மூச்சற்றுப் போகுமுன்னே இவ்வேழை மகனுக்கு
25துரிதம்✓
முழுமதி நிகரறு முகமொடு விழி மலர்
அழகொடு பெருகிய அருளொடு விரைவிலென்
அப்பனே வந்தாள் — இப்போதே
மெய்ப்பதந் தந்தாள் — உன் தாஸன்
சுப்புரத்நந் தான் — தருந்தேன்
ஒப்புமாறே நான் — சொரிந்தேன் (அப்பனே)
✓
இராகம்: அசாவேரி தாளம்: ஆதி
பச்சைமயி லேறிவருவான் — அன்பர்கள் குறை
அத்தருண மேகளைகுவான் — ஷண்முகனொரு (பச்சை)
நிச்சயமி தேததியி
னிற்சரண மேயடைவிர்
அச்சமிலை வேலவனி
னிசையினை நீர்பெறிலோர் (பச்சை)
✓
நச்சுவடி வேலுமுடையான் — வெம்பகைவரைப்
புயத்துடலை வாரியெறிவான் ஷண்முக னொரு (நச்சு)
மெச்சுகவிக் கீரனது
பத்தியினி லேயிளகி
மொய்த்தொரரக் கன் சிரநி
லத்தினில்வி ழச்செய்யுமொர் (நச்சு)
✓
தொத்துகிளி போல் விரைகுவான் — உண்மையிலவன்
பத்தருளமே யுறைகுவான் — ஷண்முகனொரு (தொத்)
முத்துநிகர் வாய்க்குறவர்
பெற்றகுற மாது தரும்
அத்தினனதே னோடுமவள்
பொற்றனமு மேயுணவொர் (தொத்)
26✓
கொத்தடிமை யாய் நலிகுவார் — விண்ணவர் சிறை
முற்றுமவர் மீள அருள்வான் — ஷண்முகனொரு (கொ)
பொய்த்த ஒரு சூரர்குலம்
அத்தனைஒ ரேநொடிவி
டுத்துநிரு மூலமிடு
சுப்புரத்தி னம் புகலும் (பச்சை)