முருகன் App
மயிலம் சுப்பிரமணியர் துதியமுது
கனக. சுப்புரத்தினம் (பாரதிதாசன்)
வேல்15 / 17
மயிலம் சுப்பிரமணியர் துதியமுது · கனக. சுப்புரத்தினம் (பாரதிதாசன்)

வேல்

இராகம்: இந்துஸ்தான் பியாக் தாளம்: ஏகம்
27வண்ணம்✓
தருமங் குநறுந் தருணங் கண்டன் றே நே ரே
தவிரென் கந்தன் பகைகண் டஞ்சும் கூர் வேல் வேல்
எரியுஞ் சுகங்கண் புவியுஞ் சுந்தின் சூர் மார் பே
இருதுண் டங்கண் டுயிர்சிந் தும்பைந் தார் வேல் வேல்
கிரவுஞ் சன்றன் பெருமங் கந்துண் டா மா றே
கெடவும் பண்டங் குமைதந் தின்பங் கூர் வேல் வேல்
திருவும் பண்புங் கலையுந் தந்திங் கே வாழ் வே
செயவென் றன்பங் கினில்வந் தண்டுஞ் சீர் வே லே
வரைதங் குஞ்செங் கதிரும் பொங்கும் பா ரீ ரோ
வளரண் டங்கண் டுயருஞ் செம்பொன் தோய் வேல் வேல்
அரிதென் றண்டும் கருமம் பஞ்சென் றோ டா தோ
அலைபொங் குந்தண் கடலுண் குந்திண் கூர் வேல் வேல்
பரைமைந் தன்கந் தனுரந் தங்குந் தோள் மே லே
பழகுஞ் செஞ்சந் தனமிஞ் சுந்தண் சீர் வேல் வேல்
மரையென் குங்கஞ் சமுகந் தங்கும் தூ யோர் வாழ்
மயிலந் தங்கும் சுரர்தம் பங்கம் தீர் வே லே