முருகன் App
மயிலம் சுப்பிரமணியர் துதியமுது
கனக. சுப்புரத்தினம் (பாரதிதாசன்)
மயில மலைச் சிறப்பு5 / 17
மயிலம் சுப்பிரமணியர் துதியமுது · கனக. சுப்புரத்தினம் (பாரதிதாசன்)

மயில மலைச் சிறப்பு

கஜல்✓
இராகம்: ஆனந்த பைரவி தாளம்: அடசாப்பு
அறு பொறியின் வடிவாகி யங்கையிலே பரைதந்த சக்திவாங்கி
அமரர் படுந் துயர் நீங்கச் சயமோங்க அசுரர்குல மூலந்தன்னை
துரிதம்✓
அடிகொண்டு களைகின்ற இளமைந்த னமர்கின்ற
அசலங்கொள் புகழ்தன்னை அறைகின்ற முறைகொண்மின்
அங்கண் ஞாலத் திருப்பவர் வானவர் அங்ஙனே நின்று கண்டு துதித்திடத்
திங்கள் சூடும் சிகரமும் நாற்றிசைச் சேருஞ் சாரலும் சீதளத் தூற்றலும்
1துரிதம்✓
திரிகின்ற புயல் வேழம் அரிகண்ட உடனோடச்
சரிகின்ற மலையென்று நரிகண்டங் ககம்வாட (1)
கஜல்✓
மலர்க்குலங்கள் பொழிதேனும் மஞ்சுமொழி பனியும் சந்திரதாரையும்
மஞ்சனநீராய்த் தவத்தர்செஞ்சடையில் சோர மங்களப் பண்பாடி வண்டு
துரிதம்✓
மகரந்தப் பொடிவாரித் துகள்மிஞ்சப் புவிவீச
வதிகின்ற குறமாதர் இருகெண்டை விழிகூச
மல்லிகைப் புதர் வெண்ணகை யாடவும் மாதுளங்கினி ஆலிலை போர்த்தவும்
நல்லதென் றலணைத்திடக் கன்னிமா நாணி மேனி சிலிர்த்துக் குலைந்திடும்
2துரிதம்✓
நளிருற்ற குரவஞ்சந் தனமற்றத் தருவுந்தம்
நறைகொட்ட நிறையுஞ்செங் கமலப்பொற் றடமுற்றும்(2)
கஜல்✓
அரவுதரு மாணிக்கம் மறைமுத்தம் வரையீன்ற வச்சிரம் பொற்சன்ன ராசி
அற்புதங்கொள் ஜோதி வல்லி யிற்கலந்த போது வல்ல
துரிதம்✓
இருள் முற்றும் ஒளியாகும் மிகுரத்ந மணிமாலை
எழிலுற்ற மலைமாது மிலைவுற்ற தென வோத
எங்கு நோக்கினும் புள்ளினத் தின்னொலி இடையில் வேடர்செய் ஆட்டங்கள் பாட்டுகள்
தொங்கு மாலையின் வெள்ளருவிக்குலம் தூர நின்றிழி போதொரு சந்தப்பண்
3துரிதம்✓
தொழுபத்தர் முருகா என் றழுகைக்கண் ணெழு மோசை
சுர மொத்த கரதாளம் நிரை யொத்த திடிமேளம்(3)
கஜல்✓
குஞ்சரி யோர்பாகம் குறவள்ளி யோர்பாகம்
கொஞ்சக்கைவேல் கொட்டொளியும்
தழைத்தொளிரும் கருணைநோக்கும் குளிர்வநதன மீராறும்
நளிர்பதமும் கொண்டகோயில்
துரிதம்✓
குறைதீர விரைவாக வருவார்கள் ஒருகோடி
குகனேஷண்முகனேஎன் றடிசோர நடமாடிக்
குப்பலாகப் பொற்காவடி தோள் தூக்கிக் கொள்கையாவுங்
குமாரன் தன் மேலாக்கிச்
சுப்புரத்தினம் சொற்றமிழ்ப்பா வாக்கில் சூழத்தென்
மயிலாசனமே நோக்கிச்
10முடிவு✓
சுராதிபனை வாழ்த்தி நலம் துய்ப்பரதி சோபிதமே.