முருகன் App
மயிலம் சுப்பிரமணியர் துதியமுது
கனக. சுப்புரத்தினம் (பாரதிதாசன்)
நெஞ்சுக்கு நீதி கூறல்12 / 17
மயிலம் சுப்பிரமணியர் துதியமுது · கனக. சுப்புரத்தினம் (பாரதிதாசன்)

நெஞ்சுக்கு நீதி கூறல்

இராகம்: தேசிகதோடி தாளம்: ரூபகம்
பல்லவி✓
ஒன்று கேள் மனமே
அநுபல்லவி✓
இன்றுதொட்டு நீ ஒருவழி நின்று நல்ல சுகமணுகிட (ஒன்று)
சரணம்✓
சென்று சென்று பழி பாவத்தில் வீழாதே
செல்வாக்கை யெண்ணிப் பிறர் கையில் தாழாதே
வென் றிகொள் மாமயி லேறிய வேலனை
விகசித மலரடி இணைகளை உனதொரு புகலிட மெனநினை (ஒன்று)
✓
அந்நிய மாதரைத் தாய் என்பாயே கண்டு
அந்தகனை வாட்டக் குமரன்கை வேலுண்டு
சின்ன மிழைத்திடு நோய்களும் பாசமும்
சிதறக் குமரக் குரிசிற் பெயரைத் தினமுச் சரியினி (ஒன்று)
19✓
கானக் குறத்தியிடம் கெஞ்சிப் பேசுவான்
கட்டொடு சூர்குலம் வேல்கொண்டு வீசுவான்
ஞானக் குறுமுனிக் கின்னருள் செய்தவனை
நத்திச் சுப்பு ரத்தி னத்தி னற்ப தத்தி னைப்பு கலுவை (ஒன்று)