முருகன் App
திருச்செந்தூர்க் கலம்பகம்
சுவாமிநாத தேசிகர்
இரங்கல்8 / 59
1காப்பு2நூல்3புயவகுப்பு4வண்டோச்சி மருங்கணைதல்5வண்டுவிடு தூது6மேகவிடு தூது7அம்மானை8இரங்கல்9பாண்10தலைவி கூற்று11தலைவி நெஞ்சொடு கிளத்தல்12கைக்கிளை13பாங்கி வேண்டல்14தலைவியை வியத்தல்15மதங்கியார்16இரங்கல்17சித்து18இரங்கல்19பனிக்காலம்20மடக்கு21தலைவியை வியத்தல்22ஊசல்23களி24இரங்கல்25இரங்கல்26இரங்கல்27பாங்கி கூற்று28கார்கண்டு பாகனொடு கழறல்29வண்டு30இடைச்சியார்31தலைவி கூற்று32கார்கண்டு பாகனொடு கழறல்33இரங்கல்34தழை35மறம்36தலைவனை வேண்டல்37இரங்கல்38எழுததெரின்ன ஏந்தலை விலக்கல்39தலைவியை ஆற்றுதல்40விலக்கல்41பிரியேனென்றல்42மாலையிரத்தல்43இரங்கல்44இதுவுமது45இரங்கல்46இதுவுமது47சுனையாடல் கூறித் தோழி நகுதல்48தலைவன்கூற்று: இரங்கல்49தோழிகூற்று: இரங்கல்50தலைவிகூற்று51பாங்கி கூற்று52இரங்கல்53தலைவியை வியத்தல்54கார்கண்டிரங்கல்55பாங்கி ஆற்றுதல்56பிச்சியார்57தலைவி பாங்கிக்குரைத்தல்58தாய் கூற்று59தலைவி கூற்று
திருச்செந்தூர்க் கலம்பகம் · சுவாமிநாத தேசிகர்

இரங்கல்

17வஞ்சிவிருத்தம்✓
மான்மகள் காதலர் மஞ்சுரும்
தேன்மலி காவுயர் செந்தூரர்
கான்மணம் நாறு கடம்பேனும்
யான்மகிழ் கூர இரங்காரே.
18ஓரொலி வெண்டுறை✓
காரேய் நிறத்துறுகட் கறுவுடைக் கடுங்கூற்றங் கலந்த காலை
யாரே விலக்குவார் அந்தோ நமரங்காள் அறிதி ரன்றே
நீரே உயப்போமா நின்று வலித்தீரேல்
கூராய் வடிவேற் குமரன் குடநாட்டுச்
சீராய் திருச்செந்தில் சென்று தொழுமினே.
19நேரிசை வெண்பா✓
தொழுதிருந்து வெம்பசியால் சோர்ந்திடுவார் கைபார்த்(து)
அழுதலம்ந் தேங்கி அலைவார்-முழுதும்
பெருகுகனை வாரிமணி பெய்திரைக்குஞ் செந்தில்
வருகுகனை வாழ்த்தாத வர்.
20கொச்சகக் கலிப்பா✓
வரங்கொண்ட உமைமுலைப்பால்
மணங்கொண்ட செவ்வாயும்
பரங்கொண்ட களிமயிலு்ம்
பன்னிரண்டு கண்மலரும்
சிரங்கொண்ட மறைஇறைஞ்சுஞ்
சேவடியும் செந்தூரான்
கரங்கொண்ட வேலுமென்றன்
கண்ணைவிட்டு நீங்காவே.