முருகன் App
திருச்செந்தூர்க் கலம்பகம்
சுவாமிநாத தேசிகர்
பனிக்காலம்19 / 59
1காப்பு2நூல்3புயவகுப்பு4வண்டோச்சி மருங்கணைதல்5வண்டுவிடு தூது6மேகவிடு தூது7அம்மானை8இரங்கல்9பாண்10தலைவி கூற்று11தலைவி நெஞ்சொடு கிளத்தல்12கைக்கிளை13பாங்கி வேண்டல்14தலைவியை வியத்தல்15மதங்கியார்16இரங்கல்17சித்து18இரங்கல்19பனிக்காலம்20மடக்கு21தலைவியை வியத்தல்22ஊசல்23களி24இரங்கல்25இரங்கல்26இரங்கல்27பாங்கி கூற்று28கார்கண்டு பாகனொடு கழறல்29வண்டு30இடைச்சியார்31தலைவி கூற்று32கார்கண்டு பாகனொடு கழறல்33இரங்கல்34தழை35மறம்36தலைவனை வேண்டல்37இரங்கல்38எழுததெரின்ன ஏந்தலை விலக்கல்39தலைவியை ஆற்றுதல்40விலக்கல்41பிரியேனென்றல்42மாலையிரத்தல்43இரங்கல்44இதுவுமது45இரங்கல்46இதுவுமது47சுனையாடல் கூறித் தோழி நகுதல்48தலைவன்கூற்று: இரங்கல்49தோழிகூற்று: இரங்கல்50தலைவிகூற்று51பாங்கி கூற்று52இரங்கல்53தலைவியை வியத்தல்54கார்கண்டிரங்கல்55பாங்கி ஆற்றுதல்56பிச்சியார்57தலைவி பாங்கிக்குரைத்தல்58தாய் கூற்று59தலைவி கூற்று
திருச்செந்தூர்க் கலம்பகம் · சுவாமிநாத தேசிகர்

பனிக்காலம்

33வஞ்சித்தாழிசை✓
நாள்வனசம் முகங்கூம்ப, நீள்குளிர்செய் பனிக்காலம்
வேள்மருவு செந்திலினெஞ், கேள்வர்தமை நினையாவே.
✓
மகன்றிலொடும் பெடைசேவல், புகன்றணையும் பனிக்காலம்
குகன்றனது செந்திலினெம், அகன்றவரை நினையாவே.
✓
தொலைபவர்மெய் குனியமதன், சிலைகுனியும் பனிக்காலம்
மலைமகள்சேய் செந்திலினெந், தலைவர்தமை நினையாவே.
34வெண்டாழிசை✓
நினைவும் ஒன்றே உரையும் ஒன்றே
பனவன் செந்தில் பணியா தொன்றே
வினையில் வீழ்ந்தவர் பால்.
35கொச்சகக் கலிப்பா✓
பால்வெள்ளை நீற்றானும் பல்லுயிரும் படைத்தானும்
சூல்வெள்ளை மணிப்பணிலஞ் சுமந்ததிருக் கரத்தானும்
சால்பெள்ள லில்லாத தனிநெடுவேற் படையானும்
சேல்வெள்ளம் பரந்துலவுந் திருச்செந்தி லிடத்தானே.
36கட்டளைக் கலித்துறை✓
இடத்தானம் ஆறெழுத் தெண்ணக்கண் ணார்நின் னிணையடிகும்
பிடத்தானம் ஆறும் பிரியா திருக்கப் பெருங்கருணைக்
கடற்றான் எனக்கருள் வாய்செந்தில் வாய்த்தென் கலைமுழுதும்
குடத்தான மாதவற் கோதிய ஞானக் குருபரனே.