முருகன் App
திருச்செந்தூர்க் கலம்பகம்
சுவாமிநாத தேசிகர்
தலைவி பாங்கிக்குரைத்தல்57 / 59
1காப்பு2நூல்3புயவகுப்பு4வண்டோச்சி மருங்கணைதல்5வண்டுவிடு தூது6மேகவிடு தூது7அம்மானை8இரங்கல்9பாண்10தலைவி கூற்று11தலைவி நெஞ்சொடு கிளத்தல்12கைக்கிளை13பாங்கி வேண்டல்14தலைவியை வியத்தல்15மதங்கியார்16இரங்கல்17சித்து18இரங்கல்19பனிக்காலம்20மடக்கு21தலைவியை வியத்தல்22ஊசல்23களி24இரங்கல்25இரங்கல்26இரங்கல்27பாங்கி கூற்று28கார்கண்டு பாகனொடு கழறல்29வண்டு30இடைச்சியார்31தலைவி கூற்று32கார்கண்டு பாகனொடு கழறல்33இரங்கல்34தழை35மறம்36தலைவனை வேண்டல்37இரங்கல்38எழுததெரின்ன ஏந்தலை விலக்கல்39தலைவியை ஆற்றுதல்40விலக்கல்41பிரியேனென்றல்42மாலையிரத்தல்43இரங்கல்44இதுவுமது45இரங்கல்46இதுவுமது47சுனையாடல் கூறித் தோழி நகுதல்48தலைவன்கூற்று: இரங்கல்49தோழிகூற்று: இரங்கல்50தலைவிகூற்று51பாங்கி கூற்று52இரங்கல்53தலைவியை வியத்தல்54கார்கண்டிரங்கல்55பாங்கி ஆற்றுதல்56பிச்சியார்57தலைவி பாங்கிக்குரைத்தல்58தாய் கூற்று59தலைவி கூற்று
திருச்செந்தூர்க் கலம்பகம் · சுவாமிநாத தேசிகர்

தலைவி பாங்கிக்குரைத்தல்

95கலிவெண்பா✓
தானக் குனிகோட்டுத் தந்தியினை யும்விலக்கிக்
கானக் குடிஞைக் கலுழியினிற் காத்தனித்துத்
தேனக்க செச்சையந்தார்ச் செந்திலார்க் கன்பரினென்
ஊனெக் குருக உயிரிற் கலந்தார்க்கு
நானக் கமழ்சூந்தல் நன்னுுதலே வாரலையென்(று)
யானுற் றுரைப்பதெவ்வா றின்று.
96கலிவெண்பா✓
இன்றுலகில் நல்குரவால் ஈடுபடுந் தன்மையினால்
அன்றும் அருவினையேன் ஆன்றஅறஞ் செய்யகிலேன்
என்றும் பிறப்பினுமிப் பெற்றியே முற்றுமெனக்
கன்றும் மனத்தாற் கவலுழந்து நில்லாது
குன்றெறிந்த செந்திற் குழகாரநின் பூங்கழற்கால்
சென்றுதொழு மாறன்பு செய்.