முருகன் App
திருச்செந்தூர்க் கலம்பகம்
சுவாமிநாத தேசிகர்
பாண்9 / 59
1காப்பு2நூல்3புயவகுப்பு4வண்டோச்சி மருங்கணைதல்5வண்டுவிடு தூது6மேகவிடு தூது7அம்மானை8இரங்கல்9பாண்10தலைவி கூற்று11தலைவி நெஞ்சொடு கிளத்தல்12கைக்கிளை13பாங்கி வேண்டல்14தலைவியை வியத்தல்15மதங்கியார்16இரங்கல்17சித்து18இரங்கல்19பனிக்காலம்20மடக்கு21தலைவியை வியத்தல்22ஊசல்23களி24இரங்கல்25இரங்கல்26இரங்கல்27பாங்கி கூற்று28கார்கண்டு பாகனொடு கழறல்29வண்டு30இடைச்சியார்31தலைவி கூற்று32கார்கண்டு பாகனொடு கழறல்33இரங்கல்34தழை35மறம்36தலைவனை வேண்டல்37இரங்கல்38எழுததெரின்ன ஏந்தலை விலக்கல்39தலைவியை ஆற்றுதல்40விலக்கல்41பிரியேனென்றல்42மாலையிரத்தல்43இரங்கல்44இதுவுமது45இரங்கல்46இதுவுமது47சுனையாடல் கூறித் தோழி நகுதல்48தலைவன்கூற்று: இரங்கல்49தோழிகூற்று: இரங்கல்50தலைவிகூற்று51பாங்கி கூற்று52இரங்கல்53தலைவியை வியத்தல்54கார்கண்டிரங்கல்55பாங்கி ஆற்றுதல்56பிச்சியார்57தலைவி பாங்கிக்குரைத்தல்58தாய் கூற்று59தலைவி கூற்று
திருச்செந்தூர்க் கலம்பகம் · சுவாமிநாத தேசிகர்

பாண்

21கட்டளைக் கலித்துறை✓
நீங்காத நேயத்தின் நீதைத்த தையலும் நின்னையன்றிப்
பாங்காய பாண பிரிந்ததென் றால்உமை பாலன்செந்தில்
யாங்கா ணலம்எனில் எம்மை வினாவுதி ஏதிலரைத்
தாங்காது நின்மதி துன்னூசி யின்திறந் தான்பிழைத்தே.
22எழுசீர் ஆசிரிய வண்ணவிருத்தம்✓
பிழையாத தொண்டர் சிறிதேசெய் அன்பு
பெரிதாக நெஞ்சம் மகிழ்வார்
உழையீனும் எங்கள் குறமாது கொண்கர்
உமைபாலர் தங்கும் இடமாம்
புழைவாய் திறந்து வளைசூலு ழைந்து
பொழிஆரம் இந்து எனவே
மழைபோல் முழங்கி அலையாழி சிந்து
வளமேவு செந்தி னகரே.