முருகன் App
திருச்செந்தூர்க் கலம்பகம்
சுவாமிநாத தேசிகர்
தலைவி கூற்று59 / 59
1காப்பு2நூல்3புயவகுப்பு4வண்டோச்சி மருங்கணைதல்5வண்டுவிடு தூது6மேகவிடு தூது7அம்மானை8இரங்கல்9பாண்10தலைவி கூற்று11தலைவி நெஞ்சொடு கிளத்தல்12கைக்கிளை13பாங்கி வேண்டல்14தலைவியை வியத்தல்15மதங்கியார்16இரங்கல்17சித்து18இரங்கல்19பனிக்காலம்20மடக்கு21தலைவியை வியத்தல்22ஊசல்23களி24இரங்கல்25இரங்கல்26இரங்கல்27பாங்கி கூற்று28கார்கண்டு பாகனொடு கழறல்29வண்டு30இடைச்சியார்31தலைவி கூற்று32கார்கண்டு பாகனொடு கழறல்33இரங்கல்34தழை35மறம்36தலைவனை வேண்டல்37இரங்கல்38எழுததெரின்ன ஏந்தலை விலக்கல்39தலைவியை ஆற்றுதல்40விலக்கல்41பிரியேனென்றல்42மாலையிரத்தல்43இரங்கல்44இதுவுமது45இரங்கல்46இதுவுமது47சுனையாடல் கூறித் தோழி நகுதல்48தலைவன்கூற்று: இரங்கல்49தோழிகூற்று: இரங்கல்50தலைவிகூற்று51பாங்கி கூற்று52இரங்கல்53தலைவியை வியத்தல்54கார்கண்டிரங்கல்55பாங்கி ஆற்றுதல்56பிச்சியார்57தலைவி பாங்கிக்குரைத்தல்58தாய் கூற்று59தலைவி கூற்று
திருச்செந்தூர்க் கலம்பகம் · சுவாமிநாத தேசிகர்

தலைவி கூற்று

98அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்✓
இழைக்கும் கூடலும் என்னிரு கண்களின்
இமைகளும் இரவெல்லாம்
உழைக்குங் கூடல மந்துதென் செந்திலாய்
ஒருக்கணங் கூடாவால்
மழைக்கண் அம்பிகை மலர்க்கரங் கோட்டியே
வார்முலை பீரோட
அழைக்க நின்றுசூத் தாடிய மணிச்சிலம்
பலம்புசே வடியானே.
99கொச்சகக் கலிப்பா✓
அடியாரின் உளமுருகன் பறியாத என்புன்சொல்
முடியாத நக்கீரர் முடுகாற்றுப் படையாமோ
தொடியார்பன் னிரண்டுதடந் தோளார்க்குத் திருச்செந்தில்
வடிவாய்வள் ளுகிர்ச்சேவல் வலனுயர்த்த கொடியார்க்கே.
100நேரிசை வெண்பா✓
ஆர்க்குங் களிவண் டறையும் பொழிற்றிருச்செந்
தூர்க்கன் புடனீசென் றுள்ளமே-கூர்க்கும்
எழுமையினும் நீபிறப்பில் எய்தாமல் சேயைத்
தொழுமதிலும் வேலுமெனச் சொல்.