முருகன் App
திருச்செந்தூர்க் கலம்பகம்
சுவாமிநாத தேசிகர்
நூல்2 / 59
1காப்பு2நூல்3புயவகுப்பு4வண்டோச்சி மருங்கணைதல்5வண்டுவிடு தூது6மேகவிடு தூது7அம்மானை8இரங்கல்9பாண்10தலைவி கூற்று11தலைவி நெஞ்சொடு கிளத்தல்12கைக்கிளை13பாங்கி வேண்டல்14தலைவியை வியத்தல்15மதங்கியார்16இரங்கல்17சித்து18இரங்கல்19பனிக்காலம்20மடக்கு21தலைவியை வியத்தல்22ஊசல்23களி24இரங்கல்25இரங்கல்26இரங்கல்27பாங்கி கூற்று28கார்கண்டு பாகனொடு கழறல்29வண்டு30இடைச்சியார்31தலைவி கூற்று32கார்கண்டு பாகனொடு கழறல்33இரங்கல்34தழை35மறம்36தலைவனை வேண்டல்37இரங்கல்38எழுததெரின்ன ஏந்தலை விலக்கல்39தலைவியை ஆற்றுதல்40விலக்கல்41பிரியேனென்றல்42மாலையிரத்தல்43இரங்கல்44இதுவுமது45இரங்கல்46இதுவுமது47சுனையாடல் கூறித் தோழி நகுதல்48தலைவன்கூற்று: இரங்கல்49தோழிகூற்று: இரங்கல்50தலைவிகூற்று51பாங்கி கூற்று52இரங்கல்53தலைவியை வியத்தல்54கார்கண்டிரங்கல்55பாங்கி ஆற்றுதல்56பிச்சியார்57தலைவி பாங்கிக்குரைத்தல்58தாய் கூற்று59தலைவி கூற்று
திருச்செந்தூர்க் கலம்பகம் · சுவாமிநாத தேசிகர்

நூல்

மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா✓
நாலடித்தரவு-2
சொல்வாய்மை தருங்கடவுட் சுருதிகரு தியபொருளைப்
பல்சான்ற பெருங்கேள்வி பனிமலய முனிவினவ
அம்புயனும் அறியாத அறமுதலாந் தமிழ்மூன்றும்
சம்புவுமன் னுடனுணரத் தருவோய்நீ முருகோனே.
✓
கண்சுருங்க விரித்தபசுங் கலவமயி லெனத்திருமுன்
மண்சுருங்க விரித்தகுண மணியாழி யெழுபரித்தேர்
அந்தினக ரனைத்துக்கும் அணிமணிமா ளிகைப்புரிசைச்
செந்தில்நகர்ச் சினகரத்துத் திருத்தகவீற் றிருந்தனையால்.
ஈரடித்தாழிசை-6✓
ஊனாகி உயிராகி உணர்வாகி உணர்வுதவும்
கோனாகி வினையளவும் குணத்தளவும் தனக்களவாய்
✓
விரவாதி யந்தமிலா வெளியாகத் தெளியாது
பரவாதி யருமுலவாப் பாமறையுந் தாமறைய
✓
வாக்குமன முங்கடந்து மண்ணொடுவிண் ணிடத்தியற்றும்
போக்குவர வொழிந்துவிழிப் புலத்துருவும் அருவமுமாய்
✓
வேதாந்தம் சித்தாந்தம் விளங்கலாந் தந்தெளிந்த
போதாந்த நாதாந்தப் புறத்தினுமப் புறம்போகி
✓
உணர்ந்தாரும் உணராரு முணராமல் உயிர்க்குயிராய்ப்
புணர்ந்தாலும் ஆறாது புலனலமுங் கலவாது
✓
நின்றதனிப் பரம்பொருளாம் நினக்கொருபே ரிலையெனினும்
இன்றுகுக னெனப்பெறுவ திளையோய்நின் விளையாட்டே.
ஓரடி அராகம்-4✓
அருமறை முறையிட அறைகழல் பறையிட
அடியருள் நினைவதுன்னடி
ஒருமையின் இருமையும் உதவிய மதியென
ஒளியொடு குளிர்வதுன்முகம்
வருமுலை வனிதையர் இருவரும் மயிலினம்
மழையென விழைவதுன்னெழில்
பெருகலை கெழுகலி கடலினும் எழுமடி
பெருகுவ துருகுநின்னருள்.
பெயர்த்தும் ஈரடித்தாழிசை-6✓
தாயென்றும் தந்தையென்றும் சகமீன்று தருமுனக்குச்
சேயென்று பின்னுமொரு திருநாமம் வருமாறென்
✓
முந்திலென்றே அடியருள முளரிதொறும் இருந்தாய்க்குச்
செந்திலென்றே உரைக்குமொரு திருப்பதியும் விருப்புளதே
✓
அயிலேற்று வருங்காலம் அல்லால்நீ கொல்லாயோ
மயிலேற்றம் ஏனுனக்கு மற்றேற்றம் பெற்றிலையோ
✓
ஓராறு பனிமதியி னொடுபவள வரையில்நிரைத்(து)
ஈராறு தினகரரும் இடையிடையே உதித்தாங்குக்
✓
கருணைபொழி திருமுகமும் கணமணிக்குண் டலநிரையும்
திருநெடுந்தோள் களும்கமலச் சேவடியும் தூவடிவும்
✓
பாடாது நினையாது பரவாத எனக்குவினை
கூடாத தொண்டரொடுங் கூட்டியுநீ காட்டினையால்.
நாற்சீர் ஈரடி அம்போதரங்கம்-2✓
பிறந்ததும் இறந்ததும் பெரும நின்புகழ்
மறந்ததும் அல்லது வணங்கி லேன்நினைக்
✓
காமமும் வெகுளியும் களிம யக்கமும்
தாமிடை கலந்தெனைத் தலைம யக்கலால்.
நாற்சீரடி அம்போதரங்கம்-4✓
உண்பதும் உடுப்பதும் உவந்து தேடினேன்
கண்படை நனவினில் கலங்கி வாடினேன்
உய்திறம் இதுவென உணர்வு போயினேன்
செய்திறம் இதுவெனும் தெரிவில் பேயினேன்.
முச்சீரடி அம்போதரங்கம்-4✓
எவ்வா றெனையுய் யக்கொள்வாய்
எழுதா மறையின் திறத்துள்ளாய்
செவ்வான் அனையான் திருப்பிள்ளாய்
தெரியா தினியுன் செயல்விள்ளாய்.
இருசீரடி அம்போதரங்கம்-8✓
மெய்யுநீஇ, பொய்யுநீஇ, விண்ணுநீஇ, மண்ணுநீஇ,
ஐயைநீஇ, செய்யைநீஇ, ஆதிநீஇ, சோதிநீஇ.
1தனிச்சொல்✓
எனவாங்கு
சுரிதகம்
நீயல தில்லை யாவையும் உலகம்
மற்றவற் றிடையான் அவத்துடற் பொறையொடு
கறங்கெனத் திரியாது பிறங்குசுற வெறியும்
நந்தூர் கடற்றுறைச் செந்தூர் பரவுவன்
காமரு பூந்தொடைக் கடம்பநின்
தாமரை மலரடி தருகமா எனவே.
2நேரிசை வெண்பா✓
எனதே குகன்செந்தில் ஏத்துதொழில் அன்னோன்
தனதே எனையாளுந் தன்மை - வினவின்
மறத்திமணா என்புமுதல் வாழ்வையெலாம் நெஞ்சே
குறத்திமணா என்புகழே கொள்.
3கட்டளைக் கலித்துறை✓
கொள்ளார் பவப்பிணி கூற்றுக்கஞ் சாரன்பர் கூட்டமல்லால்
நள்ளாற் பிணியின் நலிவு படார்தெய்வம் நாளுமற்றொன்(று)
உள்ளார் முருகன்செந் தூர்பிரி யாதவன் ஒண்கமலக்
கள்ளார் விரைமலர்த் தண்டையந் தாள்தொழக் கற்றவரே.
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்✓
கற்றாலும் நீடூழி கழித்தாலும்
கழியாத கரையில் வாழ்வு
பெற்றாலும் முருகனடிக் கன்புபெறா
தவருலகிற் பிறவி தீரார்
இற்றாலும் கலிநலிய இறந்தாலும்
பேதையராய் எழுத்தா றுள்ளத்(து)
அற்றாலும் அவனிருக்கும் செந்திலென்றார்
முந்திலென்றும் அடைவர் தாமே.
5நேரிசை ஆசிரியப்பா✓
தாமரை பயின்ற நான்முகக் கடவுள்
எழுதா மறைப்பொருள் பழுதாங் குரைப்ப
வீங்குமணிக் கடகம் தாங்குதிணி தடக்கை
முன்வருத் தியவா றின்னமும் வருத்த
விரும்பிய தாலெனத் திரும்பிட நஞ்சேய்
பாயிருள் பருகும் பல்கதிர்க் குழவி
ஞாயிறு சுறவெறி நாண்முரி திரைமுகட்(டு)
எழுவது போல மழைதழை கலாபச்
செறிமயிர்ச் சிறையார் பொறிமயிற் புறத்துச்
சேயொளி மேனி திகழவீங் கெழுந்தனை
தெய்வவான் கரிணியும் மொய்வரை யரிணியும்
தூவலங் கயிலும் சேவலங் கொடியும்
ஆறு முகமும் நீறணி புயங்களும்
பண்டைய மறைபுகழ் தண்டையந் தாள்களும்
கந்தநின் நாமமும் செந்திலம் பதியும்
வணங்கவும் நினைக்கவும் வாழ்த்தவும்
இணங்கலிற் பரவினேன் எனைவிதித் ததற்கே.
6நேரிசை வெண்பா✓
அதற்கிதற் கென்றுள் அவம்போக்கி ஆக்கம்
முதற்பொருட்கும் இன்றி முயன்றாம்-நுதற்கணவன்
சந்ததியா னஞ்செய்யான் தானுவந்து செந்தினகர்
வந்ததியா னஞ்செய்யா மல்.