முருகன் App
திருச்செந்தூர்க் கலம்பகம்
சுவாமிநாத தேசிகர்
களி23 / 59
1காப்பு2நூல்3புயவகுப்பு4வண்டோச்சி மருங்கணைதல்5வண்டுவிடு தூது6மேகவிடு தூது7அம்மானை8இரங்கல்9பாண்10தலைவி கூற்று11தலைவி நெஞ்சொடு கிளத்தல்12கைக்கிளை13பாங்கி வேண்டல்14தலைவியை வியத்தல்15மதங்கியார்16இரங்கல்17சித்து18இரங்கல்19பனிக்காலம்20மடக்கு21தலைவியை வியத்தல்22ஊசல்23களி24இரங்கல்25இரங்கல்26இரங்கல்27பாங்கி கூற்று28கார்கண்டு பாகனொடு கழறல்29வண்டு30இடைச்சியார்31தலைவி கூற்று32கார்கண்டு பாகனொடு கழறல்33இரங்கல்34தழை35மறம்36தலைவனை வேண்டல்37இரங்கல்38எழுததெரின்ன ஏந்தலை விலக்கல்39தலைவியை ஆற்றுதல்40விலக்கல்41பிரியேனென்றல்42மாலையிரத்தல்43இரங்கல்44இதுவுமது45இரங்கல்46இதுவுமது47சுனையாடல் கூறித் தோழி நகுதல்48தலைவன்கூற்று: இரங்கல்49தோழிகூற்று: இரங்கல்50தலைவிகூற்று51பாங்கி கூற்று52இரங்கல்53தலைவியை வியத்தல்54கார்கண்டிரங்கல்55பாங்கி ஆற்றுதல்56பிச்சியார்57தலைவி பாங்கிக்குரைத்தல்58தாய் கூற்று59தலைவி கூற்று
திருச்செந்தூர்க் கலம்பகம் · சுவாமிநாத தேசிகர்

களி

41தாழிசை✓
பெருமைமாநிலம் வலமதாய்வரு பீலிமாமயி லூர்தியார்
பிள்ளையார்வளர் செந்திலம்பதி யுள்ளமேதகு களியரேம்
பரைமனோன்மணி புவனிநாரணி பாலலோசனி சூலிசாம்
பவிசுகாசனி கௌரிபூசனை பண்ணும்உண்மகிழ் வெளியதோ
மருவுகேழலும் மீனும்ஆமையும் மாயனுக்கு விருப்பமா
மானினைக்கை விடானுருத்திரன் மதியுநாடொறு முயலுணும்
அரியவேள்வியி லந்தணாளர்கள் சுரபிகண்டிடின் முந்துவார்
ஐயனேசுர ராயினார்குரை யருந்தவானவ ரியாருமே.
42வேற்றொலி வெண்டுறை✓
யாருமினை யடிவணங்கும் எம்பெருமான்
தும்பிமுகற் கிளையோன் செந்தில்
சூருடைய சுடர்வடிவேல் துணர்க்கடம்பந்
தொடைக்குமரன் தொழுதி லாதார்
விரிநீர் புடைசூழ் வியன்மே தினிமேல்
பரிவால் உறுநோய் பசியால் ஒசியா
வரைசீர் அயரா வருநாள் கழியா
உரியார் இகழா உணர்வோ டுயிர்போய்
எரிவாய் நிரையத் தினும்மூழ் குவரே.
43கட்டளைக் கலித்துறை✓
மூழ்கா நிலைப்புது நீர்வேட்டு மீனம்முன் நீந்துபழந்
தாழ்கான யாறு துறந்திறந் தாங்குநின் றன்னையன்றி
வீழ்கா தலிற்றெய்வம் வேறெண்ணி யான்மெலி யாதுசெந்தில்
யாழ்கா முறுமொழி வள்ளிபங் காவுள் இரங்குவையே.