முருகன் App
திருச்செந்தூர்க் கலம்பகம்
சுவாமிநாத தேசிகர்
புயவகுப்பு3 / 59
1காப்பு2நூல்3புயவகுப்பு4வண்டோச்சி மருங்கணைதல்5வண்டுவிடு தூது6மேகவிடு தூது7அம்மானை8இரங்கல்9பாண்10தலைவி கூற்று11தலைவி நெஞ்சொடு கிளத்தல்12கைக்கிளை13பாங்கி வேண்டல்14தலைவியை வியத்தல்15மதங்கியார்16இரங்கல்17சித்து18இரங்கல்19பனிக்காலம்20மடக்கு21தலைவியை வியத்தல்22ஊசல்23களி24இரங்கல்25இரங்கல்26இரங்கல்27பாங்கி கூற்று28கார்கண்டு பாகனொடு கழறல்29வண்டு30இடைச்சியார்31தலைவி கூற்று32கார்கண்டு பாகனொடு கழறல்33இரங்கல்34தழை35மறம்36தலைவனை வேண்டல்37இரங்கல்38எழுததெரின்ன ஏந்தலை விலக்கல்39தலைவியை ஆற்றுதல்40விலக்கல்41பிரியேனென்றல்42மாலையிரத்தல்43இரங்கல்44இதுவுமது45இரங்கல்46இதுவுமது47சுனையாடல் கூறித் தோழி நகுதல்48தலைவன்கூற்று: இரங்கல்49தோழிகூற்று: இரங்கல்50தலைவிகூற்று51பாங்கி கூற்று52இரங்கல்53தலைவியை வியத்தல்54கார்கண்டிரங்கல்55பாங்கி ஆற்றுதல்56பிச்சியார்57தலைவி பாங்கிக்குரைத்தல்58தாய் கூற்று59தலைவி கூற்று
திருச்செந்தூர்க் கலம்பகம் · சுவாமிநாத தேசிகர்

புயவகுப்பு

7ஆசிரிய வண்ண விருத்தம்✓
மலர்தலை ஞாலத் தலகில வாழுற்
றுயிர்களு முந்திக் கண்பண்டு தந்தன
மறைபகர் வாய்மைத் திசைமுகம் நோவுற்
றிடுமுறை தண்டித் தன்றங்கை கன்றின
மகபதி வானத் தரசுவ ழாமல்
திருமுடி அன்பிற் கொண்டும்பு னைந்தன
வழிபடு கீரற் கழிசிறை தீரப்
பரிவொடு முந்திச் சென்றஞ்ச லென்றன
குலமட மான்மெய்ப் புதல்வியும் யானைக்
குமரியு மொன்றொத் தின்பங்க வர்ந்தன
குழையுமென் வாய்மைத் தமிழுநன் நீபத்
தொடையலு மொண்பொற் சந்துந்த வழ்ந்தன
குரைகழல் நாடித் தொழுநெறி சேர்கொத்
தடியவர் தங்கள் துன்பங்க ளைந்தன
குவிமுகை வேலைக் கவிழிணர் மாவைத்
தடிதலு மன்றிக் குன்றும்பி ளந்தன
உலகுண ராமுத் தமிழுணர் நீதிக்
குறுமுனி வந்தித் தென்றும்பு கழ்ந்தன
உலைமலி வாகைத் திருநெடு வேலிற்
சிரமவி தங்கட் கங்கங்கி யைந்தன
உமைமுலை பீர்விட் டொழுகிய பாலுக்
கழுதுயர் பொன்றக் கொண்டங்க ணுந்தின
உருகெழு கோலத் திருமுது சூரைக்
கிளையொடு மஞ்சக் கொன்றங்கண் வென்றன
கலவம யூரத் துரகதம் ஏறிப்
புவனியு மெண்டிக் கெங்குந்தி ரிந்தன
ககனவ ளாகத் தளவிய கோழிக்
கொடிவளர் கம்பத் தம்பம்பொ ருந்தின
கலைமதி போலத் திருமுக நீள்கட்
கடையருள் பொங்கிச் சிந்துந்தி பம்பின
கடலலை வாய்முத் தினவளை வீசிக்
கரைபொரு செந்திற் கந்தன்பு யங்களே.
8கட்டளைக் கலித்துறை✓
புயமா றிரண்டுக்கும் பொன்னணி யாம்புள்ளி மான்மகட்கும்
கயமான் மகளுக்கும் கண்ணிணை யாங்கடுங் கூற்றுவந்தால்
நயமாய தொண்டர்க்கும் நற்றுணை யாம்செந்தி னன்னகர்மே
வியமான் மருகன் திருக்கரத் தேந்திய வேற்படையே.
9கலிவிருத்தம்✓
படைக்கணார் மையல்நோய்ப் படுவ தல்லது
கடைக்கணான் பரகதி காணுமா றுண்டோ
உடைக்கணா திபன்றனக் கிளஞ்செந் தூர்த்தமிழ்த்
தொடைக்கணான் றுயர்புயத் தோகை பாகனே.
10குறளடி வஞ்சிப்பா✓
பாகந்தரு பனிவான்மதி
தாரகையொடு கார்முகிலிடைப்
பொருதெனவளை யுடனிலகிய
நவமணியுமிழ் கலிகெழுபுனல்
திரைபொருமொலி முரசுடனதிர்
பைந்தமிழ்வளர் செந்திலின்வரு-சேயோன்
திருந்தடி துணையெனச் சேர்பவர்
பொருந்துவர் யாரும் புகலரு நெறியே.
11கொச்சகக் கலிப்பா✓
நெறிக்குஞ்சித் தலைமறலி நெருங்கியெதிர் வருங்காலம்
செறிக்குஞ்சித் திகள்தருநின் செந்திலுமென் புந்தியதே
பொறிக்குஞ்சித் திரத்தினுடுப் பொரியாகப் புகந்துகொத்திக்
கொறிக்குஞ்சித் திரச்சரணப் படைச்சேவற் கொடியோனே.