முருகன் App
திருச்செந்தூர்க் கலம்பகம்
சுவாமிநாத தேசிகர்
இரங்கல்25 / 59
1காப்பு2நூல்3புயவகுப்பு4வண்டோச்சி மருங்கணைதல்5வண்டுவிடு தூது6மேகவிடு தூது7அம்மானை8இரங்கல்9பாண்10தலைவி கூற்று11தலைவி நெஞ்சொடு கிளத்தல்12கைக்கிளை13பாங்கி வேண்டல்14தலைவியை வியத்தல்15மதங்கியார்16இரங்கல்17சித்து18இரங்கல்19பனிக்காலம்20மடக்கு21தலைவியை வியத்தல்22ஊசல்23களி24இரங்கல்25இரங்கல்26இரங்கல்27பாங்கி கூற்று28கார்கண்டு பாகனொடு கழறல்29வண்டு30இடைச்சியார்31தலைவி கூற்று32கார்கண்டு பாகனொடு கழறல்33இரங்கல்34தழை35மறம்36தலைவனை வேண்டல்37இரங்கல்38எழுததெரின்ன ஏந்தலை விலக்கல்39தலைவியை ஆற்றுதல்40விலக்கல்41பிரியேனென்றல்42மாலையிரத்தல்43இரங்கல்44இதுவுமது45இரங்கல்46இதுவுமது47சுனையாடல் கூறித் தோழி நகுதல்48தலைவன்கூற்று: இரங்கல்49தோழிகூற்று: இரங்கல்50தலைவிகூற்று51பாங்கி கூற்று52இரங்கல்53தலைவியை வியத்தல்54கார்கண்டிரங்கல்55பாங்கி ஆற்றுதல்56பிச்சியார்57தலைவி பாங்கிக்குரைத்தல்58தாய் கூற்று59தலைவி கூற்று
திருச்செந்தூர்க் கலம்பகம் · சுவாமிநாத தேசிகர்

இரங்கல்

46எழுசீர்ச் சந்தவிருத்தம்✓
சேர்ந்த போது குளிர்ந்தும் அன்பினர்
தீர்ந்த போது கனன்றும்வான்
ஊர்ந்து கந்தன் உகந்த செந்தில்
ஒதுங்கு வெண்பணி லங்கள்போல்
ஈர்ந்து பொங்கிருள் நுங்கி யெங்கணும்
எங்கள் அங்கம் நடுங்குமா(று)
ஆர்ந்த வெம்பனி சிந்தி முந்துற
அந்தி வந்தெழும் இந்துவே.
47அறுசீர்ச் சந்தவிருத்தம்✓
இந்துவும் இரவியும் நின்றென உலவிய
இம்பரின் எழுவகையா
வந்துறு பிறவியின் நொந்துழல் உடல்தொறும்
மங்குதல் ஒழிவேனோ
செந்திலும் எனதிரு கண்களும் அடியவர்
சிந்தையும் அருமறைநூல்
அந்தமும் மகிழ்வொடு சந்ததம் உலவிய
அம்பிகை திருமகனே.
48கட்டளைக் கலித்துறை✓
மகவான் அரசும் அழிவற்ற யாக்கையும் மன்பதையும்
செகவாழ்வும் மற்றவை யாவும்பொய் யேதமிழ்চ্ செந்தில்புகுந்(து)
அகவா ரிசமலர்த் தங்கைகள் கூப்பிநின் றாறுதிரு
முகவா னவனைப் பணிவதொன் றேமெய் முயல்பவர்க்கே.
49கலித்தாழிசை✓
முயல்பவர் முயற்சியின் முன்னம் யாவையும்
நயனுணர் செந்திலான் நல்குமே
நயனுணர் செந்திலான் நல்கா னாயின்
அயலொரு வானவர்கள் ஆக்குதற்கு வல்லவரும் அல்ல ரன்றே.
50குறட்டாழிசை✓
அன்றல இன்றும் அஞரெய் துவர்வேள்
மன்றலஞ் செந்தூர் வாழ்த்தா தாரே.