முருகன் App
திருச்செந்தூர்க் கலம்பகம்
சுவாமிநாத தேசிகர்
விலக்கல்40 / 59
1காப்பு2நூல்3புயவகுப்பு4வண்டோச்சி மருங்கணைதல்5வண்டுவிடு தூது6மேகவிடு தூது7அம்மானை8இரங்கல்9பாண்10தலைவி கூற்று11தலைவி நெஞ்சொடு கிளத்தல்12கைக்கிளை13பாங்கி வேண்டல்14தலைவியை வியத்தல்15மதங்கியார்16இரங்கல்17சித்து18இரங்கல்19பனிக்காலம்20மடக்கு21தலைவியை வியத்தல்22ஊசல்23களி24இரங்கல்25இரங்கல்26இரங்கல்27பாங்கி கூற்று28கார்கண்டு பாகனொடு கழறல்29வண்டு30இடைச்சியார்31தலைவி கூற்று32கார்கண்டு பாகனொடு கழறல்33இரங்கல்34தழை35மறம்36தலைவனை வேண்டல்37இரங்கல்38எழுததெரின்ன ஏந்தலை விலக்கல்39தலைவியை ஆற்றுதல்40விலக்கல்41பிரியேனென்றல்42மாலையிரத்தல்43இரங்கல்44இதுவுமது45இரங்கல்46இதுவுமது47சுனையாடல் கூறித் தோழி நகுதல்48தலைவன்கூற்று: இரங்கல்49தோழிகூற்று: இரங்கல்50தலைவிகூற்று51பாங்கி கூற்று52இரங்கல்53தலைவியை வியத்தல்54கார்கண்டிரங்கல்55பாங்கி ஆற்றுதல்56பிச்சியார்57தலைவி பாங்கிக்குரைத்தல்58தாய் கூற்று59தலைவி கூற்று
திருச்செந்தூர்க் கலம்பகம் · சுவாமிநாத தேசிகர்

விலக்கல்

70ஆசிரியத்துறை✓
மேல்வா னவர்தம் சிறையறுத் துயர்ந்த விளங்கிலை
நெடுவேல் துளங்கெழிற் குமரன் வியன்செந்தில்
சூல்வாய்ப் பணிலம் கறங்கும் அலைவாய்த் துறைவா
இனிஎம் பிறைவாள் நுதலின் நுணர்த்தார்
அகலம் புணர்ப்போ டேகின்
பால்வாய்க் குழவி மறிமான் மறுகும் பகுவாய்ப்
புலியின் தொகைகவால் புடைப்பப் பணைக்கோட்டு
நால்வாய் இரையா வேட்டைபா யரவ நவிலும்
பாலைத் தெனலாற் கவலை நளிர்நீர்ப் பொருநைத்
தெளிநீள் பழன நன்னாட் டகமன்றே.
71நேரிசை வெண்பா✓
அகமன் றலங்கமலத் தாள்வினையேன் அன்பாற்
புகமன் றகுமகிழ்ச்சி பூத்தான்-தகஎன்றுழ்
உந்தினக ரம்போல் ஒளிகொண்ட வேற்படையோன்
செந்தினக ரம்போற் சிறந்து.