முருகன் App
திருச்செந்தூர்க் கலம்பகம்
சுவாமிநாத தேசிகர்
பிரியேனென்றல்41 / 59
1காப்பு2நூல்3புயவகுப்பு4வண்டோச்சி மருங்கணைதல்5வண்டுவிடு தூது6மேகவிடு தூது7அம்மானை8இரங்கல்9பாண்10தலைவி கூற்று11தலைவி நெஞ்சொடு கிளத்தல்12கைக்கிளை13பாங்கி வேண்டல்14தலைவியை வியத்தல்15மதங்கியார்16இரங்கல்17சித்து18இரங்கல்19பனிக்காலம்20மடக்கு21தலைவியை வியத்தல்22ஊசல்23களி24இரங்கல்25இரங்கல்26இரங்கல்27பாங்கி கூற்று28கார்கண்டு பாகனொடு கழறல்29வண்டு30இடைச்சியார்31தலைவி கூற்று32கார்கண்டு பாகனொடு கழறல்33இரங்கல்34தழை35மறம்36தலைவனை வேண்டல்37இரங்கல்38எழுததெரின்ன ஏந்தலை விலக்கல்39தலைவியை ஆற்றுதல்40விலக்கல்41பிரியேனென்றல்42மாலையிரத்தல்43இரங்கல்44இதுவுமது45இரங்கல்46இதுவுமது47சுனையாடல் கூறித் தோழி நகுதல்48தலைவன்கூற்று: இரங்கல்49தோழிகூற்று: இரங்கல்50தலைவிகூற்று51பாங்கி கூற்று52இரங்கல்53தலைவியை வியத்தல்54கார்கண்டிரங்கல்55பாங்கி ஆற்றுதல்56பிச்சியார்57தலைவி பாங்கிக்குரைத்தல்58தாய் கூற்று59தலைவி கூற்று
திருச்செந்தூர்க் கலம்பகம் · சுவாமிநாத தேசிகர்

பிரியேனென்றல்

72கட்டளைக் கலித்துறை✓
சிறந்தார் பரவுந் திருச்செந்தி லார்சிவன் தீநுதற்கட்
பிறந்தார் இணையடி பேணலர் போலப் பணியாவிழ்நார்
புறந்தாழ் குழலி புலம்பேல் உனையெம் பொறிகலங்கி
இறந்தாவி யான்படி னும்புரி யேன்பிறப் பேழினுமே.
73எழுசீர் இரட்டை ஆசிரிய விருத்தம்✓
எழுயர் கடாயானை மேல்வெண் குடைக்கீழ்
இணைக்கவரி எறிய இருபால்
இன்னிய முழங்கமட வன்னங் குழீஇயனைய
ஏழையர் மருங்கு சூழக்
காழகில் நறுங்குற ஞிரஞ்சுபூந் தேய்வைகடி
கமழ்தடவும் வலையும் நிமிர்தோட்
கண்ணிக் கடம்பசைய வேல்கொண்டு நீவரக்
கண்கொண் டுளங்கு ளிர்வணோ
ஆழிமுரி திரைமுகடு கிழியஎழும் எழுபுரவி
அருணமிசை கொடிநெ டுந்தேர்
ஆயிரங் கதிர்இரவி பாயிரும் பகலும்இருள்
அடையமிடை சினைவி டுதடங்
கோழிலை நறும்பூன்னை துன்னுநுண் டாதுபடு
குவிமுகை மருட்டு முடவுக்
குடவளை மணித்தொகுதி நிலவுகாய் செந்தில்வரு
குலவமரர் தம்பி ரானே.
74ஆசிரியத்தாழிசை✓
தம்பிரான் செந்திலிற் சரவணத் துதித்தோன்
அம்பொனார் கழலிணை அன்புறப் பணிந்தோர்
உம்பராய் மன்னுவர் உயர்நிலை யடைந்தே.