முருகன் App
திருச்செந்தூர்க் கலம்பகம்
சுவாமிநாத தேசிகர்
தலைவி கூற்று31 / 59
1காப்பு2நூல்3புயவகுப்பு4வண்டோச்சி மருங்கணைதல்5வண்டுவிடு தூது6மேகவிடு தூது7அம்மானை8இரங்கல்9பாண்10தலைவி கூற்று11தலைவி நெஞ்சொடு கிளத்தல்12கைக்கிளை13பாங்கி வேண்டல்14தலைவியை வியத்தல்15மதங்கியார்16இரங்கல்17சித்து18இரங்கல்19பனிக்காலம்20மடக்கு21தலைவியை வியத்தல்22ஊசல்23களி24இரங்கல்25இரங்கல்26இரங்கல்27பாங்கி கூற்று28கார்கண்டு பாகனொடு கழறல்29வண்டு30இடைச்சியார்31தலைவி கூற்று32கார்கண்டு பாகனொடு கழறல்33இரங்கல்34தழை35மறம்36தலைவனை வேண்டல்37இரங்கல்38எழுததெரின்ன ஏந்தலை விலக்கல்39தலைவியை ஆற்றுதல்40விலக்கல்41பிரியேனென்றல்42மாலையிரத்தல்43இரங்கல்44இதுவுமது45இரங்கல்46இதுவுமது47சுனையாடல் கூறித் தோழி நகுதல்48தலைவன்கூற்று: இரங்கல்49தோழிகூற்று: இரங்கல்50தலைவிகூற்று51பாங்கி கூற்று52இரங்கல்53தலைவியை வியத்தல்54கார்கண்டிரங்கல்55பாங்கி ஆற்றுதல்56பிச்சியார்57தலைவி பாங்கிக்குரைத்தல்58தாய் கூற்று59தலைவி கூற்று
திருச்செந்தூர்க் கலம்பகம் · சுவாமிநாத தேசிகர்

தலைவி கூற்று

59அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்✓
கொள்வா ரன்றோ செவிப்புலத்தெங்
குலத்தார் வலித்த கொடுங்கடிப்பின்
வள்வார் முரசங் கறங்கோதை
மணம்வேட் டயரும் மனைமுன்றில்
கள்வார் கடப்பந் தொடைச்செந்திற்
கந்தன் வேல்போல் காய்கணைபாய்
புள்வார் பொருவெங் களத்தோதை
கேட்டே அகன்ற போரேறே.
60பதின்நான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்✓
ஏறிரும் பசலைக் கலவைமான் மதச்சே
றெழுதிய வழிமதக் கலுழி
இரைத்தெறி கரடத் திரள்திணி புழைக்கை
இகற்கரி மருப்புறழ் முலைப்பூண்
நாறிருங் கூந்தல் ஏந்திழை யவர்பால்
நலந்தனக் கலந்துழன் றவமே
நாள்கழித் தவலப் படுகுழி கிடக்கும்
நான்கதி காணுமா றுளதோ
ஆறெழுத் துளங்கொண் டெம்புல னடக்கி
அவாஅறுத் தொருநெறி துருவி
அகங்குழைந் துருகிப் பருகுமன் பினருக்
கானந்த ஞானவா ரிதியே
பாறெழுந் திரைக்குந் திரைப்பசுங் குருதிப்
பருதியங் சுடரிலை நெடுவேற்
பண்ணவா விரைப்பூந் தண்நறா வயல்பாய்
பைந்தமிழ்ச் செந்தில்வா னவனே.
61அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்✓
வானமும் புவியு மாய மாறிமைம் பூதம் ஓதில்
ஊனுடம் பாதல் நாயேன் ஊழ்வினைப் பகுதி யன்றோ
கூனிளம் பிறைதோய் நெற்றிக் கொடிமணி மதில்சூழ் செந்தில்
தேனினம் தொகுதார் மல்கு செஞ்சுடர் வேலி னானே.