முருகன் App
கதிர்காமத்து அம்மானை
அருந்தவர் மகிழ்ந்து14 / 18
கதிர்காமத்து அம்மானை

அருந்தவர் மகிழ்ந்து

விருத்தம்✓
அருந்தவர் மகிழ்ந்து தெய்வ யானையி னடியைப் போற்றி
தெரிந்திடக் கடம்பன் தன்னை சிந்தை யைம்புலனை யொன்றாய்ப்
பொருந்திட வடக்கி யோகம் புரிந்தவர் பார்க்கும் போது
சொரிந்தது மயிலும் வேலுந் துணைவியோ டிலங்கை தன்னில்
28நடை✓
பஞ்சப் புலனைப் பகுப்பா யொருப்படுத்தி
நெஞ்சி லடக்கி நினைந்தார் கடம்பனைத்தான்
செப்பரிய பூவுலகில் தென்கயிலை மாநகரில்
வைப்பாட்டி வள்ளியுடன் வடிவேலர் தானிருக்க
கண்டு மகிழ்ந்தார் கதிரேசன் வாழ்பழனி
குன்றுதனைக் காத்துக் குமரேசன் நிற்பதையும்
தேவாதி தேவரெல்லாம் சிறந்ததொண்டு செய்வதையும்
கோவேந்தர் பிற்காலங் கோயில்கட்டி வைப்பதையும்
என்று மகலாம லிலங்கைதனைக் காப்பதையும்
பண்டு வினையகற்றும் பாவனையும் ஞானமதால்
ஆராய்ந்து பார்த்து ஆவலோடு கைகூப்பி
காரா யெனையென்று கண்விழித்தா ரம்மானை
விழித்தார் எழுந்தார் வீழ்ந்தார் நமஸ்கரித்தார்
செழித்தார் திருப்பாதம் சேர்ந்தோ மெனநினைந்து
புந்தி மகிழ்ந்து புளகிதங்கள் கொண்டெழுந்து
எந்தன்திருத் தாயாரே என்றுதெய்வ யானைதன்னை
வணங்கி யுமது மணவாளன் தென்கதிரை
இணங்கி மனைவியுடன் இருக்கிறா ரம்மணியே
அப்பதியை விட்டு அகலா ரொருநாளும்
இப்பதியில் நாங்கள் இருப்பதினா லென்னபலன்
வானவரு மிந்திரரும் மாதுமையும் லெட்சுமியும்
பானுமதி மாலயனும் பணிவிடைகள் செய்திருக்கார்
கன்னியர்கள் கூடிக் கங்கைநீர் தானாடி
பொன்னுலக மென்று புகழ்ந்து மகிழ்ந்திருக்கார்
வரத்தா லுயர்ந்த வல்லசுரர் மாமலையில்
கரத்தை சிரத்தில்வைத்துக் கணங்கள் குவிந்திருக்கு
கஞ்சமலர் வாவிகளும் கங்கைநீ ரோடைகளும்
துஞ்சா நிலைமைகொண்டு சூழ்ந்து வளைந்திருக்கும்
கொத்தால் கோயில்கட்டி கொள்தினைமா கொண்டுவைத்து
அத்தானே என்றழுவ ரங்குநின்று போற்றுகிறார்
வாவிதனிற் கயல்கள் மகிழ்ந்துவிளை யாடுவதும்
கூவுங் குயில்மயில்கள் குரலோசை மெத்தவுண்டு
கிள்ளைபுறா நங்கணங்கள் கீதம் படிப்பதுவும்
வள்ளிக் கொடிவளர்ந்து வனம்போ லிருக்குதங்கு
குஞ்சரங்கள் கூடிக் கோடுடனே வந்துநின்று
பஞ்சகர்த்தஞ் செய்து பாவனைகள் காட்டுவதும்
நாகம் படம்விரித்து நாரி யுமையவள்தன்
பாகன் மதலையென்று பணிந்து வணங்குவதும்
வரையேழ் துலக்கமெழ மாணிக்கக் கற்களெல்லாம்
தறையில் விளைந்து தானெரித்துக் காட்டுவதும்
தூண்டா விளக்கொன்று சோதிவொளி போலிருந்து
நீண்டு எரிந்திருக்கும் நேர்மைகளைச் சொல்லரிது
ஏழுமலை யொன்றாய் இலங்கும் தலமிதுவாய்
கேளாய் என்ஞானமதில் கிட்டினது கண்டரே
இன்னு மதிசயங்க ளிழுத்தே னகலுதது
கன்னியரே யென்று கைகூப்பி யேதுசொல்வார்
மாணிக்க வாசகனார் வடிவேலர் தன்னையங்கு
காணவரி தாகுமென்று கதிபெறவே ஓதலுற்று
அன்னவரு மங்கு அமரரொடு தானிருக்க
பொன்னுலுகம் போலப் புகழ்பெற் றிருக்குதது
மின்னனையே கேளும் மேதினியி லப்பதிபோல்
எந்நகருங் கண்டறியார் ஈசர் அடியார்கள்
வேலவரைக் காணில் விரைவொடு நாங்க ளெல்லாம்
சீலமுடன் மாபதிக்குச் செல்லுவோம் வாருமென்றார்
தெய்வானை யார்கேட்டுச் சிந்தை மிகத்தளர்ந்து
ஐயாநீ ரங்குசென்று அழைத்துவா வென்றுரைத்தாள்
ஆனை முகத்தோன் அடியான் மனதிரங்கி
கானமயில் வேலவரைக் காணவென்று தானெழவே
சோமன் மகளார் துதித்து அடியானை
வாமனென்னுந் தேவன் மைந்தனைநீர் கண்டிடுகில்
தென்கயிலை சென்று திருப்பதியி லேயிருந்து
என்பதியை நோக்கி இலங்கும் சடாஷரத்தை
மாறியபின் யோக மந்திரத்தை யுச்சரித்து
கூறியிரு அங்குக் குமரவேள் தான்வருவார்
முருகவேள் சாமியறு முகனே குகன்மாயோன்
மருகன்சேய் கார்த்தி கேயன் வரையதனை
எறிந்தோனே என்று எழுந்து வணங்கியபின்
அறிந்து மகிழ்ந்து அடியானே இங்குசெல்வார்
நீரு மவரோடு நின்மலங்கள் விட்டகற்றி
வாருமெனத் தெய்வானை வரங்கொடுத்தா ளம்மானை
விக்கினங்கள் தீர்க்கும் விநாயகனைப் போற்றிசெய்து
தக்கபுகழ் வாழ்கதிரை தான்வந்தா ரம்மானை
வெற்புடனே கண்டம் விண்டு மதிலாக
நற்பதியுந் தானிருக்கும் நன்மைகண்டு அவ்வடியான்
குடக்குக் குணக்குக் கொண்டசி வேதையொடு
வடக்குமெனுந் திசையும் மாணிக்க வாசகனார்
நாலு திசையும் நன்றாய்ப் பார்ப்பளவில்
வேலையென்னும் மேருகிரி மேவும் அவனியென்று
திட்டை தனிலிருந்து சிவயோக ஞானமொடு
நிட்டை முடித்தார் நேரிழையாள் சொற்படிக்கு
அண்டர் புகழ அறுமுகனார் தான்மகிழ
தொண்ட ரெனவே துதித்திருந்தார் யோகமதில்
ஏக மனதொன்றாய் இருக்கும் சமயமதில்
தோகையொடு வேலவனார் சூழ்ந்தா ருகந்தைமலை
வரைகள் மகிழ்ந்ததுவாம் வடிவேலர் வந்ததென்று
தறைகள் புகழ்ந்து சந்தோஷம் ஆடினதாம்
வாரியருக் காகஇந்த மலையு மிருக்குதென்று
காரியங்கள் பேசிக் காணாமல் நாமிருப்போம்
அண்ணரடியான் அருள்ஞான முள்ளவன்காண்
என்னைப் பழனிதனில் எடுத்துப் பறந்திடுவான்
சித்த ரதிகமல்லோ தெய்வானை யம்மனுக்கு
இத்தரணி வந்து என்னைக் கொடுபோவார்
வடுவேல் விழியணங்கே வள்ளியரே எந்தனைத்தான்
விடுவாளோ தெய்வானை விரைவில் விழித்திருப்போம்
தெவிட்டாக் கனியே தெள்ளமுதே வஞ்சியரே
பகட்டா லெனையெடுத்துப் பழனிக்குக் கொண்டுசெல்வார்
ஆகையால் நாங்கள் அடியார்கள் போம்வரைக்கும்
தாகமற்று வாழ்ந்து தாமிருப்போம் வள்ளியரே
மங்கையரே இம்மலையில் மறைந்து உகந்திருந்தால்
எங்கும் புகழாக இலங்குமென்றா ரம்மானை
அம்புவிழி மானேமுன் அவுணர்கெட வேலெறிந்தேன்
சம்புவெனும் நாவல்தனில் தங்குந் தடமதுபார்
தேவர் கணஞ்சூழ்ந்து திருமுருகர் வேலெனவே
நாவலடி தன்னில்நின்று நற்றொண்டு செய்துதுபார்
இந்த மலையு மேழு திருப்பணியும்
கந்த ரடியார்க்குக் காவலென்றா ரம்மானை
குறமாதோ டாறுமுகன் கூறுந் தருணமதில்
நிறையோக வாசகனார் நினைத்தார் கடம்பனையும்
காவித் துகிலுடுத்துக் கன்னியொடு ஓர்மலையில்
மேவி மறைந்திருக்கும் வேலவனைப் போற்றிசெய்து
நன்றாக உன்னை நமஸ்கரிக்க வேணுமென்று
குன்றாக மாமுனிவர் கூறயான் கேட்டிருப்பேன்
வாழ்புவியி லேபழனி மாமலையி லுந்தனது
தாளினையைக் காணாமல் சஞ்சலமா யிங்குவந்தேன்
வல்லா வுன்மனைவி மாதுதெய்வ யானையம்மன்
தொல்லை யகற்றுமென்று தொழுதனர்கா ணம்மானை
அடிபணிந்து மாணிக்க வாசகரு மங்கிருந்து
மிடியாருக்கு வந்த வேதனையைத் தீர்ப்பவனே
என்னச் சடாட்சரமும் இலங்கியறு கோணமதாய்
தன்னை யறியாமல் சரத்தில் உருத்தோன்றி
ஆடி யெழுந்து அறுமுகனைக் காணாமல்
தேடிச் சுடார்வீசிச் செல்லமுன்னம் வள்ளியர்க்கு
புத்திமதி யுரைத்துப் புன்னகைகள் கொண்டெழுந்து
நித்திய யோகமமை நிலைநிறுத்திக் கொண்டிருந்த
வாடத் தவத்தோன் மாணிக்க வாசகனார்
தேடப் புலனடக்கிச் சிவத்தைத் தியானமுற்றார்
வாடாதே நாங்கள் வாழ்கதிரை மாநகர்க்கு
போவோ மிருபேரும் புறப்பட் டெழுந்திடுவீர்
ஓதரிய வேல்முருக ரொண்டொடிக்கு மீதுரைக்க
ஏதும்பக றாமல்வள்ளி எழுந்தனர்கா ணம்மானை
நடந்தா ரிருபேரும் நற்கதிரை மாநகர்க்கு
கடந்தா ருகந்தைவிட்டுக் கதிர்காம மம்மானை
அட்டசித்தி கொண்டு ஐம்புலனை யுள்ளடக்கி
நிட்டை முடிக்கும் நிருபனையும் வேலர்கண்டு
வஞ்சியரே பாரும் மாமணியாள் தன்னடியான்
அஞ்சலென்று என்னை அறுகோண ஆசனத்தில்
ஆறெழுத்தும் மாறி அடைத்துப் பிரணவத்தை
கூறமுன் போயென் கொழுநனைத்தா வென்றுரையும்
குகனாரு மீதுரைக்கக் கோதை யடிபணிந்து
பகவானே எந்தன் பர்த்தாவை ஈயுமென்றாள்
ஐந்து புலனு மகலத் தவசியரும்
வந்து பணிந்த மாதை முகம்நோக்கி
சிரத்திற் காதைவைத்துச் சிவாயநம வென்றெழுந்து
வரத்தினாற் கந்தரையும் வள்ளியர்க்கு ஒப்புவித்தார்
திங்கள் தனையணியும் சிவனார் மகனார்க்கு
மங்கையராய் வள்ளியம்மன் வாய்த்ததுகா ணம்மானை
வாலைப் பருவமின்னார் வள்ளியம்மை மாயையதால்
சீலத் தவங்குறைந்து தெய்வானை யாரடியான்
தென்கயிலை யோனே திருமால் மருகோனே
உன்பதியை யானு முகந்தே னெனைக்காரும்
வான்கண்ட காவில் வளங்கண்டு வந்திருந்த
தேன்வென்ற மாநகரில் சேர்ந்தே னெனைக்காரும்
முந்தாழி பிந்தாழி முத்துபெற இப்பதியில்
எந்தாழிக் காலமட்டு மிறந்தோர்க்கு முத்திகொடும்
அண்டர்க் கமுதே ஆறிரண்டு கையனே
தொண்டர்க் கருள்புரிவீர் என்று துதித்திருந்து
அடக்கினார் ஐம்புலனை அங்காயக் கூட்டையங்கு
கடத்திக் கணேசரொடு காத்தனர்கா ணம்மானை
அத்தருணந் தன்னில் அறுமுகனும் வள்ளியரும்
மித்திரனார் தன்னிடத்தில் மேவிநின்று ஏதுரைப்பார்
மாதரசே கேளும் மாணிக்க வாசகனார்
கோதறவே அண்ணர்பதங் கொண்டா ரறிந்திடுவீர்
செய்ய திருப்பதியில் தேவ ரடியானும்
பொய்யுடலை விட்டுப் பொற்கயிலை தானடைந்தார்
வையஞ் செழிக்குமினி வனவேடர் தான்கூடி
ஐயன் கணேசனென்று அடிபணிவா ராரணங்கே
அடியான் சமாதிவிட்டு அகலேன் ஒருபோதும்
குடியாக நாமிருப்போம் குன்றாத் திருப்பதியில்
யானைமுக னோடுமிவ ராவி கலந்ததினால்
கானவர்கள் தன்னிடத்தில் கனவாகத் தானுரைப்போம்
வாராயுன் அண்ணர் வனத்தில் மிகத்துயிலும்
நேரமதிற் சென்று நிலைமை யுரைத்திடுவோம்
தேனேநீ ரென்பிறகே செல்லுமென வள்ளியரும்
நானே வருவேனென்று நடந்தா ரிருபேரும்
அரன்மகனார் தன்னை யரிவையருந் தான்நோக்கி
வரம்மிகுந்த இவ்வடியான் வந்திங் கமர்ந்ததென்ன
சொல்லுமென வள்ளியம்மை தோகையில் வேலவரும்
நல்லதுகேள் சொல்வனென்று நாடி நடக்கையிலே
மேரு கிரியென்னும் மேன்மைதங்கு மோர்மலைகாண்
பாரி லுயர்குடையாய்ப் பரந்திருக்கும் நாளையிலே
வாயு சினந்து மாதிரத்தில் மோதியதால்
ஆயிரத் தெட்டரியில் அற்றதுகாண் மூன்றுமுடி
தெறித்துவந்து வீழ்ந்தது தெட்சணமா மாழிதனில்
குறித்த வவனியெனக் கொண்டுதிட லாகியபின்
தென்னிலங்கை யென்றும் திருமூர்த்தி நாமமிட்டு
மன்னன் குபேரனையும் வைத்தார்காண் வள்ளியரே
ஆதலா லிந்த அடியான் சமாதிகொண்டார்
பூதலத்தோர் போற்றிப் புகழ்வரென்றா ரம்மானை
கானக நாடன் கண்துயிலும் வேளையிலே
தானவரை வென்றழித்த சண்முகனார் வந்துநின்று
பாதி மணியணியும் பராபரனார் பங்கிலுறை
சோதியுமை யாள்புதல்வன் சொற்பனத்தில் சொல்வதுகேள்
நாடுநகர் வேடர்களே நற்பதியில் ஓரடியான்
கூடுவிட்டுத் தானகன்றார் கோயில்கட்டிக் கும்பிடுங்கோ
கேட்ட வரந்தருவார் கிளைவழியு மீடேறும்
வாட்டமில்லை யுங்களுக்கு மாணிக்கப் பிள்ளையென்றார்
மந்திரமும் வேண்டாம் வணக்கமென்று கூறுகிறேன்
கந்தா வெனமுன்னே கணேசனென்று தான்வணங்கி
நின்ற நிலையோடே நினைவை யொருப்படுத்தி
கொண்டு இருகரத்தைக் கூப்பிநின்று வாய்புதைத்து
வேண்டும் பதார்த்தம் விரைவிற் படைத்திடுங்கள்
தோன்றும் பதம்பெறுவீர் தொல்லுலகோர் வாழ்ந்திடவே
காணிக்கை கட்டிக் காவடிகள் தோளில்வைத்து
மாணிக்கக் கங்கைதனில் வந்துநீ ராடிடுவார்
நானுமுங்கள் தங்கையரும் நாடி யவரருகில்
பூணும் விரதம் பிடித்தகலோ மென்றுசொல்லி
ஆண்டி வடிவெடுத்த அமரர் துணைவனுந்தான்
தோன்றி வேடரிடம் சொற்பனத்தில் சொல்லியபின்
அகன்றார்காண் வள்ளியொடு ஆரணிய வேலநம்பி
துயின்று விழித்துச் சொற்பனங்கள் கண்டெழுந்து
தம்பிமார் தங்களையும் தானழைத்து மன்னவனும்
உம்ப ரொருவ ருற்றதிருச் சந்நிதியில்
அடங்கி யிருக்கிறதாய் ஆறுமுக வேலர்வந்து
விடங்கிற் றுயிலுகின்ற வேளைதனிற் சொற்பனத்தில்
சொன்னார் துதித்தேன் தொழுதேன் நமஸ்கரித்தேன்
மன்னா வெனமகிழ்ந்து மறைந்தார் சிறந்திலங்க
கண்டே னவரெனக்குக் கனக்க முறையுரைத்தார்
என்றும் மறவேன்யான் ஏகி யறிந்திடுவோம்
வாரும்நா மெல்லோரும் வாழ்கதிரை மாநகர்க்கு
சேருவோ மென்று சிறைதளங்க ளோடுவந்தார்
நற்பதியை நாடி நடந்து வரும்வழியில்
அற்புதங்கள் கண்டு அகமகிழ்ந்து தான்வரவே
கங்கையரு காகவரக் கர்த்தன் சமாதிதன்னை
அங்குகண்டு நின்று அடிபணிந்து போற்றிசெய்து