முருகன் App
கதிர்காமத்து அம்மானை
துறவரும் புனத்தை9 / 18
கதிர்காமத்து அம்மானை

துறவரும் புனத்தை

17விருத்தம்✓
துறவரும் புனத்தை விட்டுத் தோகைமா மயிலி லேறும்
இறைவனைத் தேடிச் செல்ல விளங்கிளி வள்ளி யாளும்
பரணதி னருகாய் வந்து பாவைதன் கரத்தை வாங்கி
குறமட மாது தானுங் குறியெல்லாங் கூற லுற்றாள்.
18நடை✓
கொடிச்சி எனுங்குறத்தி கொங்கை அசைந்திடவே
பிடித்துவள்ளி தன்கரத்தைப் பார்த்துப் பலனுரைப்பாள்
வாலைப் பருவமுள்ள வஞ்சியரே செப்பிடக்கேள்
வேலருன்னை மன்றல் விரைவில் முடிப்பார்காண்
அட்டதிக்கோர் தான்புகழ ஆறுமுக வேலரொடு
மட்டளவில் லாமலையில் வாழ்ந்து குடியிருப்பீர்
ஏனம்மா வுன்மனதில் ஏக்கமொன்று தோற்றுதிப்போ
கானமதி லோர்முனிவன் கலக்கம்போ லாகுதிங்கே
தினையறுக்கு முன்பாகச் செந்திவடி வேலவரும்
உனைமயக்க வேடமெல்லா மூட்டுவா ரம்மணியே
வடக்கிற் கெவுளியொன்று வந்தநாட் டொட்டுயிங்கு
நடக்கும் முறைகளெல்லாம் நவிலுதடி மெல்லியரே
கனவுந் தலைமயக்கும் கருத்தும் பிசகுவதும்
மனமுங் கலக்கமுற்று வாடுகிறீர் பெண்ணணங்கே
வேட னொருவன் வில்லோடு தான்வருவான்
மாடமதி லேமறைந்து மவுன முடனிருப்பீர்
ஆண்டி யொருவனிங்கு ஆபரணங் கூறிடுவான்
வேண்டா மெனத்துரத்தி மேவி மறைந்திருப்பீர்
வேங்கைமர மொன்றுதுதான் வேலிமருங் காய்வளரும்
தீங்கொன்று செய்யாமல் தெய்வமர மென்றுசொல்லி
உந்தனுக்குத் தெய்வ மொருவரன்றி வேறுமில்லை
கந்தரெனும் ரேகையது காணுதுகா ணென்றுரைத்து
ஆறுமுக வேலவரை அனுதினமு மேதுதித்து
நீறணிந்து வாருமம்மா நிந்தனைகள் வாராது
பிறவி யெழுவருண்டு பிதாவு மவர்களல்லோ
துறவியெனப் போவீர் தோகையரே யான்போறேன்
மெய்யென்று நம்பி விரதம் பிடித்திருந்தால்
கையன் மணம்புரிவார் கண்டுகொள்ளு மென்றகன்றாள்
மாதுவள்ளி யன்றுதொட்டு மனமகிழ்ந்து தானிருக்க
வாதுபுரி நாரதரும் வடிவே லரைத்தேடி
வந்து பழனிதனில் வரையெறிந்தோன் தன்னிடத்தில்
கந்தா கடம்பனென்று கைகூப்பி வாய்புதைத்து