முருகன் App
குறுக்குத்துறைக் குறவஞ்சி
தி.சு. ஆறுமுகம்
இதுவுமது44 / 96
1பாயிரம்2கட்டியக்காரன் வரவு3இதுவுமது4உலா அறிவித்தல்5கட்டியக்காரன்கூற்று6உலாக் காணப் பெண்கள் வரல்7இதுவுமது8மோகினிப்பெண் வரல்9இதுவுமது10மோகினி பந்தடித்தல்11இதுவுமது12இதுவுமது13இதுவுமது14இதுவுமது15கட்டியக்காரன் கூற்று16மோகினி வேலனைக் காணல்17இவர் யாரென மோகினி திகைத்தல்18மோகினி மயங்கி வீழ்தல்19இதுவுமது20பாங்கிமார் செயல்21முதுதாதி கண்டுணர்தல்22பாங்கியர் உபசரித்தல்23முதுதாதி வினாதல்24மோகினி கூறல்25முது தாதி கூறல்26சந்திரனைப் பழித்தல்27இதுவுமது28மன்மதனைப் பழித்தல்29இதுவுமது30தென்றலைப் பழித்தல்31இதுவுமது32பாங்கியர் மோகினியைக் கடிதல்33மோகினி கூறுவது34இதுவுமது35இதுவுமது36பாங்கியின் கூற்று37தூது சொல்ல மோகினி பாங்கியை வேண்டல்38இதுவுமது39இதுவுமது40இதுவுமது41மோகினி கூடலிழைத்தல்42இதுவுமது43குறத்தி வருதல்44இதுவுமது45பாங்கி வந்து கூறல்46இதுவுமது47மோகினிமுன் குறத்தி வரல்48மலைவளங் கூறல்49மோகினி கூற்று50குறத்தி நாட்டுவளங் கூறல்51இதுவுமது52மோகினி தல மகிமைகேட்டல்53குறத்தி தல மகிமை கூறல்54இதுவுமது55கிளைவளம் கேட்டல்56கிளைவளம் கூறல்57குறிவளங் கேட்டல்58தன்குறிவளங் கூறல்59தன்குறி மோகினி கேட்டல்60குறத்தி கூறல்61கவியின் கூற்று62ஆவன செய்தல்63கவியின் கூற்று64குறத்தி தெய்வம் வணங்கல்65கவியின் கூற்று66கைபார்த்துக் குறிசொல்லல்67குறிசொல்லல்68இதுவுமது69இதுவுமது70மோகினி நாணல்71கவியின் கூற்று72சிங்கன் தோற்றம்73இதுவுமது74சிங்கன் தன்வலி கூறல்75இதுவுமது76கவியின் கூற்று77சிங்கன் கூற்று78கவியின் கூற்று79சிங்கன் கூறல்80சிங்கியை நினைத்தல்81சிங்கன் புலம்பல்82இதுவுமது83சிங்கன் கூறல்84இதுவுமது85கவியின் கூற்று86குளுவன் கூற்று87கவியின் கூற்று88சிங்கியைத் தேடல்89சிங்கி எதிர்ப்படல்90சிங்கன் சிங்கியைக் காணல்91சிங்கன் வினாவல்92சிங்கன் சிங்கி தர்க்கம்93கவியின் கூற்று94மீண்டும் தர்க்கம்95மங்களம் பாடல்96கவியின் கூற்று
குறுக்குத்துறைக் குறவஞ்சி · தி.சு. ஆறுமுகம்

இதுவுமது

நிலைமண்டில ஆசிரியப்பா
43✓
உலகப் பொதுமறை யுதவிய தீந்தமிழ்
குலவிய பொதிகைக் கோடுயர் மலையான்
வருவார் கொடும்பவம் மருவா தொழிக்கும்
பொருநை யெனுமுயர் புண்ணிய நதியான்
செந்நெற் கரும்பொடு தேன்மலி கழனி
✓
பொன்னெனக் கொழிக்கும் பாண்டியா நாட்டான்
ஆவடு துறையர் அரும்பணி யாலிப்
பூவுல கெங்கும் புகழடைந் தோங்கும்
காவணி துறையும் பூவணி பொழிலும்
மாவணி திருவுரு மாமலைப் பதியான்
✓
திருமயிற் பரியான் சுரவெண் கரியான்
செருவிற் பொலிந்துயர் சேவலங் கொடியான்
வீரம் கொடைமணம் மேவுமும் முரசுான்
பாரினைப் புரக்கும் படர்வெண் குடையான்
பிணையிரு விழியும் பிடியிரு விழியுமாம்
✓
இணையிரு அளிகளும் அணைநறுங் கடம்பான்
குறையா வளம்பல நிறைசீர் குறுக்குத்
துறையான் தேவர்தம் குறைதீர்த் தாண்டவன்
முருகார் குமரனின் திருவருள் பாடி
உருவார் மோகினி யுறைநெடு மறுகில்
✓
எண்ணிரு முழம்பல வண்ணப் புடவையை
திண்ணமா யொருபா வாடைசெய் தணிந்து
முழுவயி றெங்கணும் வெளியே தெரியவும்
எழுமுலை தமக்கே இழுத்தொரு கச்சினைத்
தரித்தே தலைமயிர் விரித்தள்ளிச் செருகி
✓
வரிசை யுறத்தலை யூசிகள் மாட்டிக்
கோடணிக் கொண்டையில் வாடா மலர்பல
சூடியும் நீறுந் திலகமு மணிந்து
குலத்திற் கியையக் குன்றியும் பாசியும்
பலபல புனைந்து பொலிவுடன் சிறந்து
✓
கரஞ்சேர் மாத்திரைக் கோலுந் தாங்கிக்
கக்கந் தனிலொரு கூடையு மேந்தி
“மொழிக்கொரு பசப்பும் முலைக்கொரு குலுக்கும்
விழிக்கொரு சிமிட்டும் வெளிக்கொரு பகட்டுமாய்க்”
குறிவகை யாவுங் குறைவற வுணர்ந்து
✓
பிறபுவி தன்தமிழ்க் குறியா லடக்கி
“மன்னவர் தமக்கு வலதுகை நோக்கி
இன்னகை மடவார்க் கிடதுகை பார்த்துச்”
கடந்தமுன் குறியும் நடந்திடும் குறியும்
தொடர்ந்திடுங் குறியுந் தெளிவுடன் கூறி
✓
மெய்யுறு குறியும் கையுறு குறியும்
விழியுறு குறியும் மொழியுறு குறியும்
எவ்வகைக் குறியும் இசைந்திடக் கூறும்
செவ்விதழழ்க் குறவஞ் சியுமணு கினளே.