முருகன் App
குறுக்குத்துறைக் குறவஞ்சி
தி.சு. ஆறுமுகம்
மோகினி பந்தடித்தல்10 / 96
1பாயிரம்2கட்டியக்காரன் வரவு3இதுவுமது4உலா அறிவித்தல்5கட்டியக்காரன்கூற்று6உலாக் காணப் பெண்கள் வரல்7இதுவுமது8மோகினிப்பெண் வரல்9இதுவுமது10மோகினி பந்தடித்தல்11இதுவுமது12இதுவுமது13இதுவுமது14இதுவுமது15கட்டியக்காரன் கூற்று16மோகினி வேலனைக் காணல்17இவர் யாரென மோகினி திகைத்தல்18மோகினி மயங்கி வீழ்தல்19இதுவுமது20பாங்கிமார் செயல்21முதுதாதி கண்டுணர்தல்22பாங்கியர் உபசரித்தல்23முதுதாதி வினாதல்24மோகினி கூறல்25முது தாதி கூறல்26சந்திரனைப் பழித்தல்27இதுவுமது28மன்மதனைப் பழித்தல்29இதுவுமது30தென்றலைப் பழித்தல்31இதுவுமது32பாங்கியர் மோகினியைக் கடிதல்33மோகினி கூறுவது34இதுவுமது35இதுவுமது36பாங்கியின் கூற்று37தூது சொல்ல மோகினி பாங்கியை வேண்டல்38இதுவுமது39இதுவுமது40இதுவுமது41மோகினி கூடலிழைத்தல்42இதுவுமது43குறத்தி வருதல்44இதுவுமது45பாங்கி வந்து கூறல்46இதுவுமது47மோகினிமுன் குறத்தி வரல்48மலைவளங் கூறல்49மோகினி கூற்று50குறத்தி நாட்டுவளங் கூறல்51இதுவுமது52மோகினி தல மகிமைகேட்டல்53குறத்தி தல மகிமை கூறல்54இதுவுமது55கிளைவளம் கேட்டல்56கிளைவளம் கூறல்57குறிவளங் கேட்டல்58தன்குறிவளங் கூறல்59தன்குறி மோகினி கேட்டல்60குறத்தி கூறல்61கவியின் கூற்று62ஆவன செய்தல்63கவியின் கூற்று64குறத்தி தெய்வம் வணங்கல்65கவியின் கூற்று66கைபார்த்துக் குறிசொல்லல்67குறிசொல்லல்68இதுவுமது69இதுவுமது70மோகினி நாணல்71கவியின் கூற்று72சிங்கன் தோற்றம்73இதுவுமது74சிங்கன் தன்வலி கூறல்75இதுவுமது76கவியின் கூற்று77சிங்கன் கூற்று78கவியின் கூற்று79சிங்கன் கூறல்80சிங்கியை நினைத்தல்81சிங்கன் புலம்பல்82இதுவுமது83சிங்கன் கூறல்84இதுவுமது85கவியின் கூற்று86குளுவன் கூற்று87கவியின் கூற்று88சிங்கியைத் தேடல்89சிங்கி எதிர்ப்படல்90சிங்கன் சிங்கியைக் காணல்91சிங்கன் வினாவல்92சிங்கன் சிங்கி தர்க்கம்93கவியின் கூற்று94மீண்டும் தர்க்கம்95மங்களம் பாடல்96கவியின் கூற்று
குறுக்குத்துறைக் குறவஞ்சி · தி.சு. ஆறுமுகம்

மோகினி பந்தடித்தல்

காவடிச்சிந்து மெட்டு
9✓
பருவத் துடிப்பிலொன்றிப் பரும னடர்த்திகொண்டு
படர்கச் சினைக்கிழிக்கும் கொங்கையாள்-எழில்
பழகும் வளைகொழிக்கும் செங்கையாள்-இந்தப்
பாரி லேமயில் வீரவேலவர்
சேரு மாமலைத் தீர மோகினி
பலரும் மயங்கப்பார்வை பேசுவாள்-தவித்
தலறிக் கலங்கச்சீர்கை வீசுவாள்
✓
மருவத் துடிதுடிக்கும் மயிலாள் துடியிடைக்கு
மழையோ டொளிருமின்னல் தான்நிகர்-கண்கள்
மருள விழிப்பதும் பெண் மான்நிகர்-தவ
மாரு மாமுனி வோரு மேவிழி
யார வேகளி கூர மேவிட
மையல் கொடுக்குமின்ப மூச்சினாள்-அந்தத்
தையல் மருந்தையொக்கும் பேச்சினாள்
✓
பெருநத் தினைப்புனைந்து பொலிவார்ந் திடச்சிறந்து
பெரிதும் துடிதுடிக்கும் மூக்கினாள்-பெரும்
புலவர் வடித்தெடுத்த வாக்கினாள்-திருப்
பாத மேலடர்ந் தோதை யேயிடும்
நாத மேவுசங் கீத மேயெனப்
புலம்பித் தவிக்கும் ரெண்டு தண்டையாள்-வண்டர்
புகுந்து மதுகுடிக்கும் கொண்டையாள்
✓
உருவத் தினிற்சிறந்து ஒளிர்பாற் கடல்கடைந்து
உயருந் திருவமுத மேனியாள்-அவள்
உரையில் பெரிதினிக்கும் சீனியாள்-உள
மோடு யாவருந் தேடு வேலவர்
பீடு லாசெலும் வீதி மீதினில்
ஒயிலாய் நடைபயின்று நாடினாள்-நாடி
மயிலாய்ப் பந்துபயின்றும் ஆடினாள்.