முருகன் App
குறுக்குத்துறைக் குறவஞ்சி
தி.சு. ஆறுமுகம்
சிங்கன் கூறல்79 / 96
1பாயிரம்2கட்டியக்காரன் வரவு3இதுவுமது4உலா அறிவித்தல்5கட்டியக்காரன்கூற்று6உலாக் காணப் பெண்கள் வரல்7இதுவுமது8மோகினிப்பெண் வரல்9இதுவுமது10மோகினி பந்தடித்தல்11இதுவுமது12இதுவுமது13இதுவுமது14இதுவுமது15கட்டியக்காரன் கூற்று16மோகினி வேலனைக் காணல்17இவர் யாரென மோகினி திகைத்தல்18மோகினி மயங்கி வீழ்தல்19இதுவுமது20பாங்கிமார் செயல்21முதுதாதி கண்டுணர்தல்22பாங்கியர் உபசரித்தல்23முதுதாதி வினாதல்24மோகினி கூறல்25முது தாதி கூறல்26சந்திரனைப் பழித்தல்27இதுவுமது28மன்மதனைப் பழித்தல்29இதுவுமது30தென்றலைப் பழித்தல்31இதுவுமது32பாங்கியர் மோகினியைக் கடிதல்33மோகினி கூறுவது34இதுவுமது35இதுவுமது36பாங்கியின் கூற்று37தூது சொல்ல மோகினி பாங்கியை வேண்டல்38இதுவுமது39இதுவுமது40இதுவுமது41மோகினி கூடலிழைத்தல்42இதுவுமது43குறத்தி வருதல்44இதுவுமது45பாங்கி வந்து கூறல்46இதுவுமது47மோகினிமுன் குறத்தி வரல்48மலைவளங் கூறல்49மோகினி கூற்று50குறத்தி நாட்டுவளங் கூறல்51இதுவுமது52மோகினி தல மகிமைகேட்டல்53குறத்தி தல மகிமை கூறல்54இதுவுமது55கிளைவளம் கேட்டல்56கிளைவளம் கூறல்57குறிவளங் கேட்டல்58தன்குறிவளங் கூறல்59தன்குறி மோகினி கேட்டல்60குறத்தி கூறல்61கவியின் கூற்று62ஆவன செய்தல்63கவியின் கூற்று64குறத்தி தெய்வம் வணங்கல்65கவியின் கூற்று66கைபார்த்துக் குறிசொல்லல்67குறிசொல்லல்68இதுவுமது69இதுவுமது70மோகினி நாணல்71கவியின் கூற்று72சிங்கன் தோற்றம்73இதுவுமது74சிங்கன் தன்வலி கூறல்75இதுவுமது76கவியின் கூற்று77சிங்கன் கூற்று78கவியின் கூற்று79சிங்கன் கூறல்80சிங்கியை நினைத்தல்81சிங்கன் புலம்பல்82இதுவுமது83சிங்கன் கூறல்84இதுவுமது85கவியின் கூற்று86குளுவன் கூற்று87கவியின் கூற்று88சிங்கியைத் தேடல்89சிங்கி எதிர்ப்படல்90சிங்கன் சிங்கியைக் காணல்91சிங்கன் வினாவல்92சிங்கன் சிங்கி தர்க்கம்93கவியின் கூற்று94மீண்டும் தர்க்கம்95மங்களம் பாடல்96கவியின் கூற்று
குறுக்குத்துறைக் குறவஞ்சி · தி.சு. ஆறுமுகம்

சிங்கன் கூறல்

இசைப்பாட்டு
இராகம்: பந்துவராளி தாளம்: ஆதி
(எடுப்பு)✓
புள்ளினம் மேயுதையே-குளுவா (புள்)
(தொடுப்பு)✓
துள்ளிடும் மானைத் துரத்திவந் தேனெனச்
சொல்லிப் பலமொழி எள்ளி சரசமாய்
வள்ளிக் குறத்தியைக் கள்ளத் தனமுடன்
வாரி யணைத்தவர் ஊரின் புறமெல்லாம்(புள்)
(முடிப்பு)✓
போகப் பணைசூழ்வி ளாகப் புறம்பிலும்
பூவைத் துறந்தவர் மேவிப் பலருடன்
ஆகத் திறுதியில் வேகுந் திடரநிறை
அந்த மிகுகருப் பன்றுறை தன்னிலும்
பாகத் துடன்குட பாளையஞ் சுற்றிலும்
பக்கத் துறுசிறு நத்தத் திடலிலும்
நாகத் தணையுயில் மேகக் கிருட்டிணன்
நாளுந் தங்குதிரு வாலயப் பாங்கினும் (புள்)
✓
துள்ளு மயிலவர்க் குள்ள திருக்கோவில்
சூழ்ந்திடு மாமரச் சோலையி னுள்ளினும்
அள்ளற் பணையடுத் துள்ள சிக்கல்நர
சையன்கி ராமத்தை மொய்யடர் காவிலும்
வெள்ளம் வரிக்குகன் மேவி யருள்புரி
மேலக் கோவிலணி சோலைப் புறத்தினும்
உள்ளங் கவரெழில் கொள்சிந்து பூந்துறை
உள்ளும் புறமும் ஒருங்கே திரண்டுதான் (புள்)
✓
நன்பயி ரோங்கிடுந் தென்பத்து தன்னிலும்
நாட்டுக்கோட் டைச்செட்டி மார்மடஞ் சுற்றிலும்
வன்மங்கொண் டேபழி வாங்கிய நீலியும்
வாசம் புரிதிரு வாலயப் பாங்கினும்
இன்பமு டன்பணை நன்கு பயன்றர
என்றும் புனல்தரும் தாமிர பன்னியின்
மன்கரை மேவும் மடங்களைச் சுற்றிலும்
மாமரக் காவினும் தாமனம் போலவே- (புள்)
✓
எங்கும் மிகுவெள்ளம் பொங்கி நிறையினும்
என்று மழியாது நின்று நிலைத்திடும்
துங்க மிகுமுனி யாப்பிள்ளை யார்கோவிற்
சுற்றுப் புறத்தினும் நற்றவ னாமேழை
புங்க மிகுமமா வாசைப் பரதேசிப்
பேர்பெறு காவினுஞ் சோர்வறக் கூடியே
தங்கி மனம்போலும் பொங்கு மகிழ்வுடன்
தட்டில தாயிரை பெற்று நிரையாகப் - (புள்)