முருகன் App
குறுக்குத்துறைக் குறவஞ்சி
தி.சு. ஆறுமுகம்
மலைவளங் கூறல்48 / 96
1பாயிரம்2கட்டியக்காரன் வரவு3இதுவுமது4உலா அறிவித்தல்5கட்டியக்காரன்கூற்று6உலாக் காணப் பெண்கள் வரல்7இதுவுமது8மோகினிப்பெண் வரல்9இதுவுமது10மோகினி பந்தடித்தல்11இதுவுமது12இதுவுமது13இதுவுமது14இதுவுமது15கட்டியக்காரன் கூற்று16மோகினி வேலனைக் காணல்17இவர் யாரென மோகினி திகைத்தல்18மோகினி மயங்கி வீழ்தல்19இதுவுமது20பாங்கிமார் செயல்21முதுதாதி கண்டுணர்தல்22பாங்கியர் உபசரித்தல்23முதுதாதி வினாதல்24மோகினி கூறல்25முது தாதி கூறல்26சந்திரனைப் பழித்தல்27இதுவுமது28மன்மதனைப் பழித்தல்29இதுவுமது30தென்றலைப் பழித்தல்31இதுவுமது32பாங்கியர் மோகினியைக் கடிதல்33மோகினி கூறுவது34இதுவுமது35இதுவுமது36பாங்கியின் கூற்று37தூது சொல்ல மோகினி பாங்கியை வேண்டல்38இதுவுமது39இதுவுமது40இதுவுமது41மோகினி கூடலிழைத்தல்42இதுவுமது43குறத்தி வருதல்44இதுவுமது45பாங்கி வந்து கூறல்46இதுவுமது47மோகினிமுன் குறத்தி வரல்48மலைவளங் கூறல்49மோகினி கூற்று50குறத்தி நாட்டுவளங் கூறல்51இதுவுமது52மோகினி தல மகிமைகேட்டல்53குறத்தி தல மகிமை கூறல்54இதுவுமது55கிளைவளம் கேட்டல்56கிளைவளம் கூறல்57குறிவளங் கேட்டல்58தன்குறிவளங் கூறல்59தன்குறி மோகினி கேட்டல்60குறத்தி கூறல்61கவியின் கூற்று62ஆவன செய்தல்63கவியின் கூற்று64குறத்தி தெய்வம் வணங்கல்65கவியின் கூற்று66கைபார்த்துக் குறிசொல்லல்67குறிசொல்லல்68இதுவுமது69இதுவுமது70மோகினி நாணல்71கவியின் கூற்று72சிங்கன் தோற்றம்73இதுவுமது74சிங்கன் தன்வலி கூறல்75இதுவுமது76கவியின் கூற்று77சிங்கன் கூற்று78கவியின் கூற்று79சிங்கன் கூறல்80சிங்கியை நினைத்தல்81சிங்கன் புலம்பல்82இதுவுமது83சிங்கன் கூறல்84இதுவுமது85கவியின் கூற்று86குளுவன் கூற்று87கவியின் கூற்று88சிங்கியைத் தேடல்89சிங்கி எதிர்ப்படல்90சிங்கன் சிங்கியைக் காணல்91சிங்கன் வினாவல்92சிங்கன் சிங்கி தர்க்கம்93கவியின் கூற்று94மீண்டும் தர்க்கம்95மங்களம் பாடல்96கவியின் கூற்று
குறுக்குத்துறைக் குறவஞ்சி · தி.சு. ஆறுமுகம்

மலைவளங் கூறல்

எண்சீராசிரியம்
47மலைவளங் கூறல்-எண்சீராசிரியம்✓
வரைவளமே கூறிடென வுரைமொழியும் பெண்ணே
வழுத்திடுவேன் விருப்புடன்நீ கேட்டிடுவாய் கண்ணே
தரைவளமும் நீர்வளமுங் குறைவிலவா யோங்கும்
தண்பொருநை நாடாமென் தண்டமிழ்சேர் நாட்டில்
நிறைவளமே சேர்குறுக்குத் துறைவதியும் வேலர்
நெருங்கிவரு வார்க்கருளும் நின்மலர்செவ் வேளர்
மறைவளஞ்சேர் திருவுருமா மலையரருள் மலியும்
வண்பொதிகை மலையதுநான் வதியுமலை யம்மே.
✓
அடைபனிகொள் ளிமயமலை யரனதுவா மென்றே
அங்குறைதல் தரமலவென்றடி பணிந்து மீண்டேன்
இடையுறுமவ் விந்தமலை இடைஞ்சலெனக் கொண்டே
இருந்திடவு மெண்ணாமல் நடந்துவழி கொண்டேன்
நடைவழியில் நாகமலை யடைந்ததனைத் தள்ளி
நகரிமலை கண்டதனை யகன்றுவழி கொண்டேன்
தடையலதென் றானைமலை தங்கிடவும் மேவித்
தரம்பெரிய தூங்கலென இறங்கிவந்தே னம்மே.
✓
மேருமலை சாபமலை ஏறவிலை யம்மே
மேவுதிரி கூடமுங்குற் றாலமலை யம்மே
கூறுமொரு காளத்தியும் கண்பறித்த தென்றே
குடியிருக்க எண்ணாத படிவிடுத்தேன் அம்மே
பேறுதருஞ் சோலைமலை விராலிமலை மற்றும்
பழனிமலை சுவாமிமலை பரங்கிரிதா மெல்லாம்
சீருருமா மலைமுருகர் சீதனமா மெனவே
திரும்பவுமே உரிமைகொள்ள விரும்பவிலை யம்மே.
✓
பின்னரும்யான் தங்கியகல் குன்றுசில வுண்டே
பேசிடுவேன் கேளாயோ மாசிரியும் அம்மே
மன்னிடவே திருப்பதியில் முன்னியபோ ததனில்
மாலாடையு மென்றதாலப் பாலடைந்தே னம்மே
இன்னமுங்கேள் சோழமலை கொல்லிமலை யென்றே
இங்கடைந்து பொதியமலை தங்கியுளே னம்மே
புன்னகைசேர் பொற்கொடியே அன்னதுகொள் வளமே
புகன்றிடுத லரிதெனினும் புகன்றிடுவே னம்மே.
✓
நறுங்குறிஞ்சி வளமனைத்தும் நிறைந்திருக்கு மம்மே
நனியகிலுஞ் சந்தனமும் மணம்பெருக்கு மம்மே
பெருங்குழுவாய்த் தேக்குடனே வரைபணையு மம்மே
பொலிவுடனே வான்தடவிப் புதரடரு மம்மே
அருங்காரந்தள் வேங்கையுடன் குறிஞ்சிதரும் பூக்கள்
அணியணியாய் மணங்கமழ அலர்ந்திருக்கு மம்மே
வருங்குடத்து முனிக்கருளுந் திருவுருமா மலையர்
வண்டமிழ்சேர் பொதியமலை கொண்டகுடி யம்மே.
✓
புலிகரடி சிங்கமிவை மலிந்திருக்கு மம்மே
பெருமலைக ளெனக்கரிகள் திரிந்துலவு மம்மே
பிலிகளணு காமலையில் கிளிகள்பறந் தோடும்
படர்முகிலைக் கண்டுமயில் நடமிகவே ஆடும்
ஒலிகிளப்பிக் கானவரும் கிலிபிடித்தே ஓடும்
உழுவைமுத லாயவிலங் கழுவமுறச் சாடும்
கலிகடியுந் திருவுருமா மலைமுருக ரணை
கடலிவரும் பொதியமென்றன் குடியறிவா யம்மே.
7✓
கரைபுரண்டு பொருநைநதி வரைமுகடு தாவிக்
காத்திரமாய்க் கல்யாணித் தீர்த்தமெனச் சாடும்
சிரைமருண்டு மரங்கிலே விரைந்தலறித் தாவும்
சிலையெனவே நின்றுபுலி நிலைகுலைந்தே ஓடும்
நுரைதிரண்டு பொங்குபுனல் சுரந்தவறா திசைக்கும்
நுடங்குபல குழைதழைகள் நடம்பயின்றே குதிக்கும்
திரைபுரண்டு வருபொருநைக் கரையுருமா மலையர்
தேயமுறும் பொதியமெனக் காயகுடி யம்மே.
8✓
காடுதொறுந் தினைவிதைத்துப் பாடுபல புரிவோம்
காண்மலைநெல் வரையரிசி வேணவைதாம் பெறுவோம்
கூடுதொறும் நாடியுந்தேன் கொண்டதுவாய் மடுப்போம்
கும்பகரிக் கொம்பதனால் கம்புதினை யிடிப்போம்
வீடுவரும் விருந்தினரை நாடியவை கொடுப்போம்
விழுமருவி நுழைந்தாடிச் செழுஞ்சுனைநீர் குடிப்போம்
தேடுபெருஞ் செல்வமிகு திருவுருமா மலையர்
செலுத்தாணை சேர்பொதிகை நிலைத்தகுடி யம்மே.