முருகன் App
குறுக்குத்துறைக் குறவஞ்சி
தி.சு. ஆறுமுகம்
கைபார்த்துக் குறிசொல்லல்66 / 96
1பாயிரம்2கட்டியக்காரன் வரவு3இதுவுமது4உலா அறிவித்தல்5கட்டியக்காரன்கூற்று6உலாக் காணப் பெண்கள் வரல்7இதுவுமது8மோகினிப்பெண் வரல்9இதுவுமது10மோகினி பந்தடித்தல்11இதுவுமது12இதுவுமது13இதுவுமது14இதுவுமது15கட்டியக்காரன் கூற்று16மோகினி வேலனைக் காணல்17இவர் யாரென மோகினி திகைத்தல்18மோகினி மயங்கி வீழ்தல்19இதுவுமது20பாங்கிமார் செயல்21முதுதாதி கண்டுணர்தல்22பாங்கியர் உபசரித்தல்23முதுதாதி வினாதல்24மோகினி கூறல்25முது தாதி கூறல்26சந்திரனைப் பழித்தல்27இதுவுமது28மன்மதனைப் பழித்தல்29இதுவுமது30தென்றலைப் பழித்தல்31இதுவுமது32பாங்கியர் மோகினியைக் கடிதல்33மோகினி கூறுவது34இதுவுமது35இதுவுமது36பாங்கியின் கூற்று37தூது சொல்ல மோகினி பாங்கியை வேண்டல்38இதுவுமது39இதுவுமது40இதுவுமது41மோகினி கூடலிழைத்தல்42இதுவுமது43குறத்தி வருதல்44இதுவுமது45பாங்கி வந்து கூறல்46இதுவுமது47மோகினிமுன் குறத்தி வரல்48மலைவளங் கூறல்49மோகினி கூற்று50குறத்தி நாட்டுவளங் கூறல்51இதுவுமது52மோகினி தல மகிமைகேட்டல்53குறத்தி தல மகிமை கூறல்54இதுவுமது55கிளைவளம் கேட்டல்56கிளைவளம் கூறல்57குறிவளங் கேட்டல்58தன்குறிவளங் கூறல்59தன்குறி மோகினி கேட்டல்60குறத்தி கூறல்61கவியின் கூற்று62ஆவன செய்தல்63கவியின் கூற்று64குறத்தி தெய்வம் வணங்கல்65கவியின் கூற்று66கைபார்த்துக் குறிசொல்லல்67குறிசொல்லல்68இதுவுமது69இதுவுமது70மோகினி நாணல்71கவியின் கூற்று72சிங்கன் தோற்றம்73இதுவுமது74சிங்கன் தன்வலி கூறல்75இதுவுமது76கவியின் கூற்று77சிங்கன் கூற்று78கவியின் கூற்று79சிங்கன் கூறல்80சிங்கியை நினைத்தல்81சிங்கன் புலம்பல்82இதுவுமது83சிங்கன் கூறல்84இதுவுமது85கவியின் கூற்று86குளுவன் கூற்று87கவியின் கூற்று88சிங்கியைத் தேடல்89சிங்கி எதிர்ப்படல்90சிங்கன் சிங்கியைக் காணல்91சிங்கன் வினாவல்92சிங்கன் சிங்கி தர்க்கம்93கவியின் கூற்று94மீண்டும் தர்க்கம்95மங்களம் பாடல்96கவியின் கூற்று
குறுக்குத்துறைக் குறவஞ்சி · தி.சு. ஆறுமுகம்

கைபார்த்துக் குறிசொல்லல்

ஆனந்தக் களிப்பு
65✓
மோகினிப் பெண்ணேகை காட்டாய் - பைம்பொன்
முத்திரை மோதிர மிட்டகை காட்டாய்
பாகினு மினியசொல் லாளே-பொன்னார்
பைந்தொடி குலுங்குமுன் பவளக்கை காட்டாய்.
நெளியிட்ட தளிர்க்கரங் காட்டாய்-துய்ய
நித்திலச் சூடகந் தரித்தகை காட்டாய்
நளினமோ டேசங்க ரேகை-படர்
நலமாரும் நின்னெழிற் கரந்தனைக் காட்டாய்.
பொன்னான கையுமீ தம்மே - செல்வம்
பொங்கியே நவநிதி அளைகர மம்மே
என்னாளும் பேரறம் வளர்த்து - இனிய
இல்லறமும் நல்லறமாய் ஆக்கிடுமிக் கையே.
விருந்தோம்பிப் போற்றிடுமிக் கையே - இந்த
வியனுலக மெதிர்நோக்கி விரும்பிவருங் கையே
மருந்தாகும் பாரிந்தக் கையே - நோயால்
வாடுபவர் மேற்படவும் ஓடிடுமந் நோயே.
தொட்டவெலாம் பொன்னாக்குங் கையே - துன்பம்
கிட்டவர வொட்டாமல் தட்டிவிடுங் கையே
மட்டொழுகுஞ் சோலையணி துறையர் - உருமா
மலையருமெ டுத்தன்பாய் முத்தமருள் கையே.