முருகன் App
குறுக்குத்துறைக் குறவஞ்சி
தி.சு. ஆறுமுகம்
மீண்டும் தர்க்கம்94 / 96
1பாயிரம்2கட்டியக்காரன் வரவு3இதுவுமது4உலா அறிவித்தல்5கட்டியக்காரன்கூற்று6உலாக் காணப் பெண்கள் வரல்7இதுவுமது8மோகினிப்பெண் வரல்9இதுவுமது10மோகினி பந்தடித்தல்11இதுவுமது12இதுவுமது13இதுவுமது14இதுவுமது15கட்டியக்காரன் கூற்று16மோகினி வேலனைக் காணல்17இவர் யாரென மோகினி திகைத்தல்18மோகினி மயங்கி வீழ்தல்19இதுவுமது20பாங்கிமார் செயல்21முதுதாதி கண்டுணர்தல்22பாங்கியர் உபசரித்தல்23முதுதாதி வினாதல்24மோகினி கூறல்25முது தாதி கூறல்26சந்திரனைப் பழித்தல்27இதுவுமது28மன்மதனைப் பழித்தல்29இதுவுமது30தென்றலைப் பழித்தல்31இதுவுமது32பாங்கியர் மோகினியைக் கடிதல்33மோகினி கூறுவது34இதுவுமது35இதுவுமது36பாங்கியின் கூற்று37தூது சொல்ல மோகினி பாங்கியை வேண்டல்38இதுவுமது39இதுவுமது40இதுவுமது41மோகினி கூடலிழைத்தல்42இதுவுமது43குறத்தி வருதல்44இதுவுமது45பாங்கி வந்து கூறல்46இதுவுமது47மோகினிமுன் குறத்தி வரல்48மலைவளங் கூறல்49மோகினி கூற்று50குறத்தி நாட்டுவளங் கூறல்51இதுவுமது52மோகினி தல மகிமைகேட்டல்53குறத்தி தல மகிமை கூறல்54இதுவுமது55கிளைவளம் கேட்டல்56கிளைவளம் கூறல்57குறிவளங் கேட்டல்58தன்குறிவளங் கூறல்59தன்குறி மோகினி கேட்டல்60குறத்தி கூறல்61கவியின் கூற்று62ஆவன செய்தல்63கவியின் கூற்று64குறத்தி தெய்வம் வணங்கல்65கவியின் கூற்று66கைபார்த்துக் குறிசொல்லல்67குறிசொல்லல்68இதுவுமது69இதுவுமது70மோகினி நாணல்71கவியின் கூற்று72சிங்கன் தோற்றம்73இதுவுமது74சிங்கன் தன்வலி கூறல்75இதுவுமது76கவியின் கூற்று77சிங்கன் கூற்று78கவியின் கூற்று79சிங்கன் கூறல்80சிங்கியை நினைத்தல்81சிங்கன் புலம்பல்82இதுவுமது83சிங்கன் கூறல்84இதுவுமது85கவியின் கூற்று86குளுவன் கூற்று87கவியின் கூற்று88சிங்கியைத் தேடல்89சிங்கி எதிர்ப்படல்90சிங்கன் சிங்கியைக் காணல்91சிங்கன் வினாவல்92சிங்கன் சிங்கி தர்க்கம்93கவியின் கூற்று94மீண்டும் தர்க்கம்95மங்களம் பாடல்96கவியின் கூற்று
குறுக்குத்துறைக் குறவஞ்சி · தி.சு. ஆறுமுகம்

மீண்டும் தர்க்கம்

கண்ணிகள் வேறு
1✓
சந்தேக மென்னவென்றாய் - அடி குறச்சிங்கி
சாற்றிடுவா யேற்றவிடை
அந்தோநின் சீரடியில் - அடி குறச்சிங்கி
அரவஞ்சேர் மாயமென்னே?
2✓
சீரடியிற் காண்பதுவும் - அட குறச்சிங்கா
சீறரவம் இல்லையடா என்
பேரறிவைக் கண்டல்லவோ - நெல்லைக் காந்திமதி
பூட்டிவிட்ட சிலம்பறிவாய்
3✓
செய்தகுற்ற மென்னடிநீ - அடி குறச்சிங்கி
செங்கரத்தில் விலங்கெதற்கோ
மெய்க்குறியைக் கண்டுசிங்கா - திருநாச்சியாரும்
மெச்சியீந்த கொலுசறிவாய்
4✓
நாரியேஉன் கால்விரலில் - அடி குறச்சிங்கி
நண்டுவந்து ஒட்டியதேன்?
பேரிதகுப் பீலியென்பார் - அட குறச்சிங்கா
பெண்பெருமா ளொருத்தியிட்டாள்
5✓
உந்தனெழில் மூக்கினிலே - அடி குறச்சிங்கி
ஒட்டியதேன் மின்மினிதான்?
செந்தமிழ்தேர் பாண்டியனும் - அட குறச்சிங்கா
சீர்கொடுத்த நத்தறிவாய்
6✓
மாடுகட்டுஞ் சங்கிலியை - அடி குறச்சிங்கி
மாட்டியதா ருன்கழுத்தில்?
பீடணியுந் திருவுருமா - மலை மோகினிதான்
பூட்டிவிட்ட சரப்பளிகாண்
7✓
என்றுமில்லாப் பேரொளிதான் - அடி குறச்சிங்கி
ஏற்பட்டதே னுன்முகத்தில்?
நன்றுபுரி வேலவர்தம் - அட குறச்சிங்கா
நல்லருளுங் கிட்டியதால்
8✓
வேலவர்தம் பேரருளை - அடிகுறச்சிங்கி
வேணமட்டும் பாடிடுவோம்
சீலமுடன் பாடிடுநீ - அடகுறச்சிங்கா
சேர்ந்துடன்நா னாடிடுவேன்.