முருகன் App
குறுக்குத்துறைக் குறவஞ்சி
தி.சு. ஆறுமுகம்
இதுவுமது69 / 96
1பாயிரம்2கட்டியக்காரன் வரவு3இதுவுமது4உலா அறிவித்தல்5கட்டியக்காரன்கூற்று6உலாக் காணப் பெண்கள் வரல்7இதுவுமது8மோகினிப்பெண் வரல்9இதுவுமது10மோகினி பந்தடித்தல்11இதுவுமது12இதுவுமது13இதுவுமது14இதுவுமது15கட்டியக்காரன் கூற்று16மோகினி வேலனைக் காணல்17இவர் யாரென மோகினி திகைத்தல்18மோகினி மயங்கி வீழ்தல்19இதுவுமது20பாங்கிமார் செயல்21முதுதாதி கண்டுணர்தல்22பாங்கியர் உபசரித்தல்23முதுதாதி வினாதல்24மோகினி கூறல்25முது தாதி கூறல்26சந்திரனைப் பழித்தல்27இதுவுமது28மன்மதனைப் பழித்தல்29இதுவுமது30தென்றலைப் பழித்தல்31இதுவுமது32பாங்கியர் மோகினியைக் கடிதல்33மோகினி கூறுவது34இதுவுமது35இதுவுமது36பாங்கியின் கூற்று37தூது சொல்ல மோகினி பாங்கியை வேண்டல்38இதுவுமது39இதுவுமது40இதுவுமது41மோகினி கூடலிழைத்தல்42இதுவுமது43குறத்தி வருதல்44இதுவுமது45பாங்கி வந்து கூறல்46இதுவுமது47மோகினிமுன் குறத்தி வரல்48மலைவளங் கூறல்49மோகினி கூற்று50குறத்தி நாட்டுவளங் கூறல்51இதுவுமது52மோகினி தல மகிமைகேட்டல்53குறத்தி தல மகிமை கூறல்54இதுவுமது55கிளைவளம் கேட்டல்56கிளைவளம் கூறல்57குறிவளங் கேட்டல்58தன்குறிவளங் கூறல்59தன்குறி மோகினி கேட்டல்60குறத்தி கூறல்61கவியின் கூற்று62ஆவன செய்தல்63கவியின் கூற்று64குறத்தி தெய்வம் வணங்கல்65கவியின் கூற்று66கைபார்த்துக் குறிசொல்லல்67குறிசொல்லல்68இதுவுமது69இதுவுமது70மோகினி நாணல்71கவியின் கூற்று72சிங்கன் தோற்றம்73இதுவுமது74சிங்கன் தன்வலி கூறல்75இதுவுமது76கவியின் கூற்று77சிங்கன் கூற்று78கவியின் கூற்று79சிங்கன் கூறல்80சிங்கியை நினைத்தல்81சிங்கன் புலம்பல்82இதுவுமது83சிங்கன் கூறல்84இதுவுமது85கவியின் கூற்று86குளுவன் கூற்று87கவியின் கூற்று88சிங்கியைத் தேடல்89சிங்கி எதிர்ப்படல்90சிங்கன் சிங்கியைக் காணல்91சிங்கன் வினாவல்92சிங்கன் சிங்கி தர்க்கம்93கவியின் கூற்று94மீண்டும் தர்க்கம்95மங்களம் பாடல்96கவியின் கூற்று
குறுக்குத்துறைக் குறவஞ்சி · தி.சு. ஆறுமுகம்

இதுவுமது

கண்ணிகள்
(குறத்தி கூறல்)✓
மின்னாரும் மோகினியே - எழிற் - சின்னப்பெண்ணே
மேவுகுறி கேளாயம்மே
பொன்னாரும் மேனியளே - எழிற் - சின்னப்பெண்ணே
பேசுங்குறி கேளாயம்மே.
✓
தென்னாரருந் திருவுருமா - மலை - வீதியிலே
செவ்வழகன் பவனியிலே
பின்னாரருஞ் சேனைகண்டு - மனம் - நீபயந்து
பேதலித்த துண்டுமம்மே.
(மோகினி கூறல்)✓
என்னேநீ கூறவந்தாய் - அடி - குறச்சிங்கி
ஏற்காத வார்த்தை சொன்னாய்
முன்னே நீ சொன்னகுறி - அடி - குறச்சிங்கி
முற்றிலுமே உண்மையடி.
✓
இன்னேரம் சொன்னமொழி - அடி - குறச்சிங்கி
இம்மியும்போ ருந்திடுமோ
பின்னடருஞ் சேனைகண்டால் - கிறு - கிறுத்து
பேதலிக்குங் காய்ச்சலுண்டோ.
(குறத்தி கூறல்)✓
காய்ச்சலிது காய்ச்சலல்ல - எழிற் - சின்னப்பெண்ணே
காமமிகு காய்ச்சலம்மே
கூச்சலிடு வாயெனவே - பயம் - கொண்டதனால்
கூறவில்லை முன்னரேயான்.
பாய்ந்தெழும்பிப் பந்தடிக்குந் - தரு - ணந்தனிலே
பாங்குடனே பவனிவந்த
சேந்தனவன் மீதலவோ - எழிற் - சின்னப்பெண்ணே
சித்​தங்கொண்டு பித்தடைந்தாய்.
(மோகினி கூறல்)✓
பின்னமின்றி நானிருக்க - அடி - குறச்சிங்கி
பித்தியென்று சொல்லிவிட்டாய்
சொன்னகுறி உண்மையானால் - அவன் - பேருடனே
தாருமுருஞ் சொல்லடியே.
(குறத்தி கூறல்)✓
உன்னிலும்நா னறிகுவனோ - குறி - சொல்லிடுங்கால்
ஊரும்பேரும் சொல்லுவாரோ
பின்னுனக்கே சொல்லிடுவேன் - அவன் - பேரழகன்
பிள்ளைதர வல்லவன்காண்.
(மோகினி கூறல்)✓
பொல்லாத வார்த்தைசொன்னாய் - அடி- பிள்ளைதர
வல்லவனென் றேமொழிந்தாய்
சொல்லால்ம யக்கிடாதே - அடி - குறக்கள்ளி
சுத்தமாகச் சொல்லடியே.
(குறத்தி கூறல்)✓
நல்லதுகேள் பேரழகன் - எனில் - மாமுருகன்
பிள்ளையுஞ்சேய் தரும்மலையாம்
வல்லவனும் நாதனாகும் - முரு - கன்சேயன்
மலைநாத னென்றறிவாய்.