முருகன் App
குறுக்குத்துறைக் குறவஞ்சி
தி.சு. ஆறுமுகம்
தூது சொல்ல மோகினி பாங்கியை வேண்டல்37 / 96
1பாயிரம்2கட்டியக்காரன் வரவு3இதுவுமது4உலா அறிவித்தல்5கட்டியக்காரன்கூற்று6உலாக் காணப் பெண்கள் வரல்7இதுவுமது8மோகினிப்பெண் வரல்9இதுவுமது10மோகினி பந்தடித்தல்11இதுவுமது12இதுவுமது13இதுவுமது14இதுவுமது15கட்டியக்காரன் கூற்று16மோகினி வேலனைக் காணல்17இவர் யாரென மோகினி திகைத்தல்18மோகினி மயங்கி வீழ்தல்19இதுவுமது20பாங்கிமார் செயல்21முதுதாதி கண்டுணர்தல்22பாங்கியர் உபசரித்தல்23முதுதாதி வினாதல்24மோகினி கூறல்25முது தாதி கூறல்26சந்திரனைப் பழித்தல்27இதுவுமது28மன்மதனைப் பழித்தல்29இதுவுமது30தென்றலைப் பழித்தல்31இதுவுமது32பாங்கியர் மோகினியைக் கடிதல்33மோகினி கூறுவது34இதுவுமது35இதுவுமது36பாங்கியின் கூற்று37தூது சொல்ல மோகினி பாங்கியை வேண்டல்38இதுவுமது39இதுவுமது40இதுவுமது41மோகினி கூடலிழைத்தல்42இதுவுமது43குறத்தி வருதல்44இதுவுமது45பாங்கி வந்து கூறல்46இதுவுமது47மோகினிமுன் குறத்தி வரல்48மலைவளங் கூறல்49மோகினி கூற்று50குறத்தி நாட்டுவளங் கூறல்51இதுவுமது52மோகினி தல மகிமைகேட்டல்53குறத்தி தல மகிமை கூறல்54இதுவுமது55கிளைவளம் கேட்டல்56கிளைவளம் கூறல்57குறிவளங் கேட்டல்58தன்குறிவளங் கூறல்59தன்குறி மோகினி கேட்டல்60குறத்தி கூறல்61கவியின் கூற்று62ஆவன செய்தல்63கவியின் கூற்று64குறத்தி தெய்வம் வணங்கல்65கவியின் கூற்று66கைபார்த்துக் குறிசொல்லல்67குறிசொல்லல்68இதுவுமது69இதுவுமது70மோகினி நாணல்71கவியின் கூற்று72சிங்கன் தோற்றம்73இதுவுமது74சிங்கன் தன்வலி கூறல்75இதுவுமது76கவியின் கூற்று77சிங்கன் கூற்று78கவியின் கூற்று79சிங்கன் கூறல்80சிங்கியை நினைத்தல்81சிங்கன் புலம்பல்82இதுவுமது83சிங்கன் கூறல்84இதுவுமது85கவியின் கூற்று86குளுவன் கூற்று87கவியின் கூற்று88சிங்கியைத் தேடல்89சிங்கி எதிர்ப்படல்90சிங்கன் சிங்கியைக் காணல்91சிங்கன் வினாவல்92சிங்கன் சிங்கி தர்க்கம்93கவியின் கூற்று94மீண்டும் தர்க்கம்95மங்களம் பாடல்96கவியின் கூற்று
குறுக்குத்துறைக் குறவஞ்சி · தி.சு. ஆறுமுகம்

தூது சொல்ல மோகினி பாங்கியை வேண்டல்

| இராகம்: மாயமாளவகௌளம் தாளம்: ரூபகம்
36(எடுப்பு)✓
தூது சொல்லாயோ-சகி தூது சொல்லாயோ
சுந்தர மாமலைக் கந்தரிடம் சென்று (தூது)
(தொடுப்பு)✓
தீது மேவும் சூரன் என்ற
துட்டனிட மன்று தூதுவிட்டவர்க்குத் (தூது)
(முடிப்பு)✓
உறக்கமுங் கொள்ளாமல் வாடி
மறக்கவும் ஒண்ணாமல் நாடி
கிறக்கமும் கொண்டேயிங் கோடி
இருக்குமென் நிலை உணர்ந்தும் ஓடி
எவ்வித மேனும்நீ செவ்விய ரைத்தேடித் (தூது)
✓
வருவரே லிந்நேரம் வரட்டும்
வருவ தில்லெனின் மாலை தரட்டும்
தருவரே லென்னாவி நிலைக்கும்
தாமத முயிர்க்கிறுதி விளைக்கும்
தண்குறுக் குத்துறை அண்ணலை நாடிநீ (தூது)