முருகன் App
குறுக்குத்துறைக் குறவஞ்சி
தி.சு. ஆறுமுகம்
கிளைவளம் கூறல்56 / 96
1பாயிரம்2கட்டியக்காரன் வரவு3இதுவுமது4உலா அறிவித்தல்5கட்டியக்காரன்கூற்று6உலாக் காணப் பெண்கள் வரல்7இதுவுமது8மோகினிப்பெண் வரல்9இதுவுமது10மோகினி பந்தடித்தல்11இதுவுமது12இதுவுமது13இதுவுமது14இதுவுமது15கட்டியக்காரன் கூற்று16மோகினி வேலனைக் காணல்17இவர் யாரென மோகினி திகைத்தல்18மோகினி மயங்கி வீழ்தல்19இதுவுமது20பாங்கிமார் செயல்21முதுதாதி கண்டுணர்தல்22பாங்கியர் உபசரித்தல்23முதுதாதி வினாதல்24மோகினி கூறல்25முது தாதி கூறல்26சந்திரனைப் பழித்தல்27இதுவுமது28மன்மதனைப் பழித்தல்29இதுவுமது30தென்றலைப் பழித்தல்31இதுவுமது32பாங்கியர் மோகினியைக் கடிதல்33மோகினி கூறுவது34இதுவுமது35இதுவுமது36பாங்கியின் கூற்று37தூது சொல்ல மோகினி பாங்கியை வேண்டல்38இதுவுமது39இதுவுமது40இதுவுமது41மோகினி கூடலிழைத்தல்42இதுவுமது43குறத்தி வருதல்44இதுவுமது45பாங்கி வந்து கூறல்46இதுவுமது47மோகினிமுன் குறத்தி வரல்48மலைவளங் கூறல்49மோகினி கூற்று50குறத்தி நாட்டுவளங் கூறல்51இதுவுமது52மோகினி தல மகிமைகேட்டல்53குறத்தி தல மகிமை கூறல்54இதுவுமது55கிளைவளம் கேட்டல்56கிளைவளம் கூறல்57குறிவளங் கேட்டல்58தன்குறிவளங் கூறல்59தன்குறி மோகினி கேட்டல்60குறத்தி கூறல்61கவியின் கூற்று62ஆவன செய்தல்63கவியின் கூற்று64குறத்தி தெய்வம் வணங்கல்65கவியின் கூற்று66கைபார்த்துக் குறிசொல்லல்67குறிசொல்லல்68இதுவுமது69இதுவுமது70மோகினி நாணல்71கவியின் கூற்று72சிங்கன் தோற்றம்73இதுவுமது74சிங்கன் தன்வலி கூறல்75இதுவுமது76கவியின் கூற்று77சிங்கன் கூற்று78கவியின் கூற்று79சிங்கன் கூறல்80சிங்கியை நினைத்தல்81சிங்கன் புலம்பல்82இதுவுமது83சிங்கன் கூறல்84இதுவுமது85கவியின் கூற்று86குளுவன் கூற்று87கவியின் கூற்று88சிங்கியைத் தேடல்89சிங்கி எதிர்ப்படல்90சிங்கன் சிங்கியைக் காணல்91சிங்கன் வினாவல்92சிங்கன் சிங்கி தர்க்கம்93கவியின் கூற்று94மீண்டும் தர்க்கம்95மங்களம் பாடல்96கவியின் கூற்று
குறுக்குத்துறைக் குறவஞ்சி · தி.சு. ஆறுமுகம்

கிளைவளம் கூறல்

கண்ணிகள்
இராகம்: அடாணா தாளம்: ரூபகம்
1✓
அண்டமெ னும்பெரும் பம்பரத் தையருட்
சாட்டையா லாட்டிடுவார் - கருங்
கொண்டல டர்குறுக் குத்துறை வேலவர்
குலவளங் கேட்டிடுவாய்.
2✓
மெய்யறி வானந்தர் மையணி கண்டரம்
மேலவ ராமரனார் - இவர்க்
கையரே மாமலை யாளுமை பார்வதி
அம்மைய ராமறிவாய்.
3✓
யானையென் றேவந்து என்குல வள்ளியை
இன்னவர் பால்பிணைத்த - அந்த
யானைமு கத்தவர் தாமிவர்க் கண்ணனென்
றேயறி வாய்மனத்தே.
4✓
பாற்கடல் மேல்துயில் கொண்டத லாலவள்
பயந்தம கள்திருவைத் - தன்
மார்பகத் தேயணை மாலவர் தாமிவர்
மாமனு மென்றறிவை.
5✓
அஞ்சுத லைகளி லொன்றினை யேசிவன்
அங்கையி னாலிழந்த - அந்தக்
கஞ்சமார் வேதியன் கந்தனின் மைத்துனன்
என்றறி வாய்திருந்த.
6✓
மாமக ளுந்திரு மாமலை வேலவர்
மாமியென் றேயறிவாய் - அந்த
நாமக ளாங்கலை சேர்மக ளுந்தமக்
கையென வேதெரிவாய்.
7✓
மன்மத னின்னவர் மாமனின பிள்ளையென்
றால்ரதி சோதரியே - சிவன்
சின்மயன் வேணியில் தங்கிய கங்கையும்
சிற்றனை தான்தெரியே.
8✓
வள்ளியெ னும்மட மானுடன் வெள்ளிய
மாதங்கம் பெற்றபெண்ணை - இவர்
உள்ளிம ணந்ததும் உதவிம ணந்ததும்
ஊரறி யாதோ அம்மே.