முருகன் App
குறுக்குத்துறைக் குறவஞ்சி
தி.சு. ஆறுமுகம்
இதுவுமது7 / 96
1பாயிரம்2கட்டியக்காரன் வரவு3இதுவுமது4உலா அறிவித்தல்5கட்டியக்காரன்கூற்று6உலாக் காணப் பெண்கள் வரல்7இதுவுமது8மோகினிப்பெண் வரல்9இதுவுமது10மோகினி பந்தடித்தல்11இதுவுமது12இதுவுமது13இதுவுமது14இதுவுமது15கட்டியக்காரன் கூற்று16மோகினி வேலனைக் காணல்17இவர் யாரென மோகினி திகைத்தல்18மோகினி மயங்கி வீழ்தல்19இதுவுமது20பாங்கிமார் செயல்21முதுதாதி கண்டுணர்தல்22பாங்கியர் உபசரித்தல்23முதுதாதி வினாதல்24மோகினி கூறல்25முது தாதி கூறல்26சந்திரனைப் பழித்தல்27இதுவுமது28மன்மதனைப் பழித்தல்29இதுவுமது30தென்றலைப் பழித்தல்31இதுவுமது32பாங்கியர் மோகினியைக் கடிதல்33மோகினி கூறுவது34இதுவுமது35இதுவுமது36பாங்கியின் கூற்று37தூது சொல்ல மோகினி பாங்கியை வேண்டல்38இதுவுமது39இதுவுமது40இதுவுமது41மோகினி கூடலிழைத்தல்42இதுவுமது43குறத்தி வருதல்44இதுவுமது45பாங்கி வந்து கூறல்46இதுவுமது47மோகினிமுன் குறத்தி வரல்48மலைவளங் கூறல்49மோகினி கூற்று50குறத்தி நாட்டுவளங் கூறல்51இதுவுமது52மோகினி தல மகிமைகேட்டல்53குறத்தி தல மகிமை கூறல்54இதுவுமது55கிளைவளம் கேட்டல்56கிளைவளம் கூறல்57குறிவளங் கேட்டல்58தன்குறிவளங் கூறல்59தன்குறி மோகினி கேட்டல்60குறத்தி கூறல்61கவியின் கூற்று62ஆவன செய்தல்63கவியின் கூற்று64குறத்தி தெய்வம் வணங்கல்65கவியின் கூற்று66கைபார்த்துக் குறிசொல்லல்67குறிசொல்லல்68இதுவுமது69இதுவுமது70மோகினி நாணல்71கவியின் கூற்று72சிங்கன் தோற்றம்73இதுவுமது74சிங்கன் தன்வலி கூறல்75இதுவுமது76கவியின் கூற்று77சிங்கன் கூற்று78கவியின் கூற்று79சிங்கன் கூறல்80சிங்கியை நினைத்தல்81சிங்கன் புலம்பல்82இதுவுமது83சிங்கன் கூறல்84இதுவுமது85கவியின் கூற்று86குளுவன் கூற்று87கவியின் கூற்று88சிங்கியைத் தேடல்89சிங்கி எதிர்ப்படல்90சிங்கன் சிங்கியைக் காணல்91சிங்கன் வினாவல்92சிங்கன் சிங்கி தர்க்கம்93கவியின் கூற்று94மீண்டும் தர்க்கம்95மங்களம் பாடல்96கவியின் கூற்று
குறுக்குத்துறைக் குறவஞ்சி · தி.சு. ஆறுமுகம்

இதுவுமது

கண்ணிகள்
இராகம்: சிந்துபைரவி தாளம்: திஸ்ரம்
6✓
வேலி னைப்பிடித் தேயு லாவரும்
வேல னைத்தொடர்ந் தேவரும்
வேலெ னும்விழி யார்க ளும்பெரும்
வேலை யாமெனக் கூறலாம்.
✓
ஓர்க ரந்தனி லேவ ளையணிந்
தோர்க ரந்தனிற் பூணிடா
தார்வ மோடுவந் தேபி றர்நகை
யாட வேமுகம் நாணுவார்.
✓
கச்சி னையெடுத் தேயி டைதரித்
தேபி னன்னதைக் காணுவார்
அச்ச கோவிது கச்ச லோவென
ஆவ லாய்த்தனம் பூணுவார்.
✓
கண்ணி லொன்றினுக் கஞ்ச னந்தனைத்
தீட்டு வாரொரு கண்ணிலே
அன்ன தையிட வேம றந்தொரு
அங்கை மையுடன் நண்ணுவார்.
✓
கூந்த லோர்புற மேச டைமுடி
வார்பி னோர்புறம் பின்னிடா
தேந்தி யேயதைத் தங்க ரம்பிடித்
தோடு வார்குகன் றேடுவார்.
✓
மின்ன லாமிடை தன்னி லாடையைச்
சுற்று வாரதை மார்பிட
உன்னி டாமலே பொன்க கரந்தனில்
அள்ளி யேவிரைந் தோடுவார்.
✓
மார னோஇவன் என்ப ரேயெழில்
மேனி கண்டது மாற்றுவார்
மீறு மிந்திர னென்ப ரேவிழி
ஆயி ரந்தமைக் காண்கிலார்.
✓
விண்டு வோஇவ னென்ப ரேயுடல்
கொண்ட லாந்நிறங் கண்டிலார்
வெண்வி டைச்சிவ னென்ப ரேநுதற்
கண்ணி லையெனத் தேறுவார்.
✓
மின்னு வேலினைக் காணு வார்மயில்
மீது வந்ததை யெண்ணுவார்
செந்நி றந்தனைப் பேணு வார்உரு
மாம லைக்குகன் என்னுவார்.