முருகன் App
குறுக்குத்துறைக் குறவஞ்சி
தி.சு. ஆறுமுகம்
பாயிரம்1 / 96
1பாயிரம்2கட்டியக்காரன் வரவு3இதுவுமது4உலா அறிவித்தல்5கட்டியக்காரன்கூற்று6உலாக் காணப் பெண்கள் வரல்7இதுவுமது8மோகினிப்பெண் வரல்9இதுவுமது10மோகினி பந்தடித்தல்11இதுவுமது12இதுவுமது13இதுவுமது14இதுவுமது15கட்டியக்காரன் கூற்று16மோகினி வேலனைக் காணல்17இவர் யாரென மோகினி திகைத்தல்18மோகினி மயங்கி வீழ்தல்19இதுவுமது20பாங்கிமார் செயல்21முதுதாதி கண்டுணர்தல்22பாங்கியர் உபசரித்தல்23முதுதாதி வினாதல்24மோகினி கூறல்25முது தாதி கூறல்26சந்திரனைப் பழித்தல்27இதுவுமது28மன்மதனைப் பழித்தல்29இதுவுமது30தென்றலைப் பழித்தல்31இதுவுமது32பாங்கியர் மோகினியைக் கடிதல்33மோகினி கூறுவது34இதுவுமது35இதுவுமது36பாங்கியின் கூற்று37தூது சொல்ல மோகினி பாங்கியை வேண்டல்38இதுவுமது39இதுவுமது40இதுவுமது41மோகினி கூடலிழைத்தல்42இதுவுமது43குறத்தி வருதல்44இதுவுமது45பாங்கி வந்து கூறல்46இதுவுமது47மோகினிமுன் குறத்தி வரல்48மலைவளங் கூறல்49மோகினி கூற்று50குறத்தி நாட்டுவளங் கூறல்51இதுவுமது52மோகினி தல மகிமைகேட்டல்53குறத்தி தல மகிமை கூறல்54இதுவுமது55கிளைவளம் கேட்டல்56கிளைவளம் கூறல்57குறிவளங் கேட்டல்58தன்குறிவளங் கூறல்59தன்குறி மோகினி கேட்டல்60குறத்தி கூறல்61கவியின் கூற்று62ஆவன செய்தல்63கவியின் கூற்று64குறத்தி தெய்வம் வணங்கல்65கவியின் கூற்று66கைபார்த்துக் குறிசொல்லல்67குறிசொல்லல்68இதுவுமது69இதுவுமது70மோகினி நாணல்71கவியின் கூற்று72சிங்கன் தோற்றம்73இதுவுமது74சிங்கன் தன்வலி கூறல்75இதுவுமது76கவியின் கூற்று77சிங்கன் கூற்று78கவியின் கூற்று79சிங்கன் கூறல்80சிங்கியை நினைத்தல்81சிங்கன் புலம்பல்82இதுவுமது83சிங்கன் கூறல்84இதுவுமது85கவியின் கூற்று86குளுவன் கூற்று87கவியின் கூற்று88சிங்கியைத் தேடல்89சிங்கி எதிர்ப்படல்90சிங்கன் சிங்கியைக் காணல்91சிங்கன் வினாவல்92சிங்கன் சிங்கி தர்க்கம்93கவியின் கூற்று94மீண்டும் தர்க்கம்95மங்களம் பாடல்96கவியின் கூற்று
குறுக்குத்துறைக் குறவஞ்சி · தி.சு. ஆறுமுகம்

பாயிரம்

1கணபதி காப்பு-நேரிசை வெண்பா✓
திருவுரு மாமலைமேற் செந்தமிழி லோர்நற்
குறவஞ்சி பாடிடக்கை கூப்பிப்-பெருவயிறன்
வேழ முகத்தன் விநாயகன் றன்னிருபொற்
றாளைப் பணிகுவாம் தாழ்ந்து.
2கந்தன் காப்பு-அறுசீராசிரிய விருத்தம்✓
தாழ்ந்தடி வணங்கு வார்க்குத் தண்ணருள் பொழியும் வேலன்
வாழ்ந்தருள் குறுக்குத் துறைமேல் வண்குற வஞ்சி யோத
ஆழ்ந்தநற் காத லோடு மவனருள் வேண்டி நிற்பின்
போந்தருள் செய்தி டானோ புனிதனம் முருகன் மாதோ.
3சிவபிரான்காப்பு-கலிவிருத்தம்✓
மாதனையும் பங்கனொரு மால்விடையன றன்னின்
போதனையும் பாதமலர் போற்றியெழில் மஞ்ஞை
மீதனையும் வேலனுரு மாமலையின் குறுமே
ஓதநினைந் தேனெளியேற் குற்றுதுணை யாமே.
4சக்தி காப்பு-அறுசீராசிரியம்✓
ஆகுஞ் செயல்க ளெவையாயு
மன்னை சக்தி யருளன்றோ
பாகுந் தோற்கும் மொழியாளின்
பாத மலர்கள் தமைச்சூடி
வாகுஞ் சீருஞ் சேருருமா
மலைமேற் குறமொன் றினைப்பாடப்
போகு மெளியேற் கிடர்வருமோ
பொய்யா தருளைப் பொழிவாளே.
5தமிழ்த்தாய்க் காப்பு-கட்டளைக் கலித்துறை✓
அருள்சேர் திருவுரு மாமலை மேற்குற மாக்கிடவே
மருள்சே ரெளியன் பெரிதும் விழைந்து மனந்துணிந்தேன்
பொருள்சேர் தமிழ்த்தாய் புதல்வ னெனக்கே பொழிந்திரங்கி
இருள்சே ரெனதகந் தங்கி யருள்வ ளெனநினைந்தே.
6புலவர் காப்பு-எண்சீராசிரிய விருத்தம்✓
சங்கமுறு கூடலுறை யங்கயற்கண் ணம்மை
தான்மகிழ வேகுறஞ்செய் குமரகுரு நாதன்
புங்கமுறு வண்புலவர் புகழ்தனையே பேசும்
பொற்படருங் குற்றாலக் குறவஞ்சி செய்த
துங்கமுறு ராசப்பச் சிங்கமிவர் போன்ற
தூயபுல வோரடிகள் சேயனும்ப ணிந்தே
மங்குலட ருங்குறுக்குத் துறைமீதிக் குறமே!
வழுத்திடம னந்துணிந்தேன் வருமிடரு முண்டோ?
7அவையடக்கம்-அறுசீராசிரிய விருத்தம்✓
இப்பியுட் கிடந்த தென்றே இகழ்வரோ தரளந் தன்னை
அப்பிடைச் சேற்றி லாயு மம்புய மொதுக்கு வாரோ
துப்படர் வண்கு றுக்குத் துறையனின் சீரை யிந்நூல்
செப்பிய தாலே மேலோர் சிந்தையுட் கொள்வார் மாதோ.
8நூற்பயன்-எண்சீராசிரியம்✓
தேவரிடர் தீர்த்தருளுந் திருவுருமா மலையன்
செந்தமிழ்சேர் சீரணிடந் திருமுருகு மேற்று
மேவுமிடர் நீக்கியொரு மூங்கையெனும் பிள்ளை
மொழியறியச் செய்துகலி யேற்றுமகிழ் வோனின்
மாவலிமை யைப்புகழை வழுத்திடுமிந் நூலை
மனவொருமை யோடுபடிப் பாருடன்கேட் பாரும்
தாவமெது மின்றிநலங் கொண்டுபுவி வாழ்ந்து
தாய்வயிறு சேராமல் சேயடிசேர் வாரே.