முருகன் App
பதினாறு பேறும் பாலிப்பாய்
ரெ. இராமசாமி
அறிவு12 / 19
பதினாறு பேறும் பாலிப்பாய் · ரெ. இராமசாமி

அறிவு

10✓
அறிவினது சின்னமெனும் அயிலாம் வேலை
அன்னைதரப் படையாக அணிந்த காலை
பரிவோடு ஞானத்தைப் படைக்கும் சாமி!
பாதகங்கள் வாராமல் காக்கும் ஞானம்!
செறிவான நன்மைகளைச் சேர்க்கும் ஞானம்
சீரான மெய்ப்பொருளைக் காணும் ஞானம்
நெறியாக உலகொட்டி வாழும் ஞானம்
நிறைவான அறிவுகளை நிறைப்பாய் ஐயா!