முருகன் App
பதினாறு பேறும் பாலிப்பாய்
ரெ. இராமசாமி
நுகர்ச்சி11 / 19
பதினாறு பேறும் பாலிப்பாய் · ரெ. இராமசாமி

நுகர்ச்சி

9✓
கற்பியலும் களவியலும் கலந்தாற் போல
கன்னிதெய்வ யானைவள்ளி அம்மை தம்மைப்
பொற்புறவே திருமணத்தைப் புரிந்த வேளே!
பொருந்திவரும் இருவினைகள் நுகர்ச்சி நேர்ந்தும்
அற்புதமாய் இல்வாழ்வில் அகமே ஒன்றி
அருங்காதல் இன்பத்தின் நுகர்ச்சி யோடு
பற்பலவாம் நல்வழியின் இன்பம் எல்லாம்
படிந்தவற்றில் நுகர்ச்சிகொளச் செய்வாய் ஐயா!