முருகன் App
பதினாறு பேறும் பாலிப்பாய்
ரெ. இராமசாமி
புகழ்3 / 19
பதினாறு பேறும் பாலிப்பாய் · ரெ. இராமசாமி

புகழ்

1✓
உலகுயிர்கள் வாழ்வதற்கே ஓம்பும் ஈசா!
ஒப்பில்லா ஒளிப்பிழம்பாய் உலவும் தேசா!
அலகில்லா அழகெல்லாம் அமைந்த வாசா!
அகத்தியர்க்குத் தமிழுரைத்த ஆதி ஓசா!
இலங்குகின்ற உனதுபுகழ் என்றும் பேசி
எப்பழியும் எய்தாமல் இனிய பாசம்
நிலவுகின்ற ஈகையினால் புகழைத் தாசன்
நேரியநல் வாழ்வினிலே நிறைப்பாய் ஐயா!