முருகன் App
பதினாறு பேறும் பாலிப்பாய்
ரெ. இராமசாமி
பெருமை14 / 19
பதினாறு பேறும் பாலிப்பாய் · ரெ. இராமசாமி

பெருமை

12✓
முந்நாளில் தனவணிகர் குலத்தில் வந்து
மூகைஉருத் திரசன்மன் ஆகத் தோன்றி
அந்நாளில் புலவர்களின் கலக்கம் தீர்த்த
ஆசானாம் செட்டிஎனும் அரனின் மைந்தா!
எந்நாளும் பணிந்தொழுகும் பெருமைப் பண்பே
எப்போதும் செருக்கின்றி இயங்கும் பண்பே
அன்னியர்தம் குறைபாட்டை மறைக்கும் பண்பே
ஆனபெரும் பெருமைப்பண்(பு) அளிப்பாய்
ஐயா!