முருகன் App
பதினாறு பேறும் பாலிப்பாய்
ரெ. இராமசாமி
கல்வி4 / 19
பதினாறு பேறும் பாலிப்பாய் · ரெ. இராமசாமி

கல்வி

2✓
இளமைமனம் அழகுதெய்வத் தன்மை இன்பம்
எல்லாமாய் உருக்கொண்ட முருக தேவே!
வளமையுறு வாழ்க்கைக்கு வற்றாச் செல்வம்
வகையான கல்விஎன வகுத்தார் ஆன்றோர்
இளமையிலே அக்கல்விச் செல்வம் ஈந்தே
இனிதாக அதன்நெறியில் என்றும் நின்றே
அளவையிலாப் பயன்பெற்றே அடியார் வாழ
ஆண்டவனே! பண்டிதனே! அருள்வாய் ஐயா!