முருகன் App
பதினாறு பேறும் பாலிப்பாய்
ரெ. இராமசாமி
அழகு13 / 19
பதினாறு பேறும் பாலிப்பாய் · ரெ. இராமசாமி

அழகு

11✓
அழகுகளே தவப்பயனால் அடைந்த கோலம்
அனைத்துமுள இளமைக்கே ஆதி மூலம்
பழவினைகள் பறந்தோடப் பண்ணும் பாலா!
பாரியாள்தன் கொழுநனையே பேணல் அந்தம்
பிழம்பில்லா நுண்மையிடைப் பெண்ணைப் போலப்
பிறழாத மொழிபேசல் நடைக்கே அந்தம்
வழங்குகின்ற பண்பொழுக்கம் வடிவில் எல்லாம்
வனப்புகளை வாய்க்கச்செய் வடிவேல் ஐயா!