முருகன் App
பதினாறு பேறும் பாலிப்பாய்
ரெ. இராமசாமி
நோயின்மை17 / 19
பதினாறு பேறும் பாலிப்பாய் · ரெ. இராமசாமி

நோயின்மை

15✓
மமகாரம் இல்லார்பால் மகேசன் வந்து
மகிழ்ந்தவர்க்கே அருள்புரியும் மாண்பு போல
குமரிவள்ளி தனைத்தேடிக் குறுகிக் காதல்
கொண்டவளை மணங்கொண்ட குமர வேலா!
சமமாக, உணவுகளைச் செரித்த பின்பு
சாப்பிட்டே நோயின்மை சார்ந்து நிற்க,
எமதுடற்கே ஏற்றஉண்டி இட்டே உண்ண,
எக்காலும் நோயின்றிக் காப்பாய் ஐயா!