முருகன் App
பதினாறு பேறும் பாலிப்பாய்
ரெ. இராமசாமி
நன்மக்கள்7 / 19
பதினாறு பேறும் பாலிப்பாய் · ரெ. இராமசாமி

நன்மக்கள்

5✓
மலைசார்ந்த இடத்தோடு மலையுங் கொண்ட
மகிழ்வுதரும் குறிஞ்சிநில மக்கட் தேவா!
கலைசார்ந்த கோவில்களில் சிலையாய் நின்று
காட்சிதந்து காத்துருளும் சுப்ர மண்யா!
நிலைசார்ந்த புண்ணியப்பே(று) எய்து தற்கு
நெறிபிறழாப் பழிஇல்லா நேர்மை ஞானம்
தலைசார்ந்த நற்பண்பும் தகவே சேர்ந்த
தனிச்சிறப்பாம் நன்மக்கள் தருவாய் ஐயா!