முருகன் App
பதினாறு பேறும் பாலிப்பாய்
ரெ. இராமசாமி
துணிவு16 / 19
பதினாறு பேறும் பாலிப்பாய் · ரெ. இராமசாமி

துணிவு

14✓
தந்தையார் தரவிருந்த பழத்திற் காக
தமதுமயில் இவர்ந்துலகை வலமாய் வந்த
கந்தமலை முருகேசா! கார்த்தி கேயா!
கட்டாயம் மிகஊக்கம் கருத்தில் கொண்டே
எந்தவொரு செய்கை, வழி, எண்ணிப், பின்பு
இதயத்தில் துணிவுடனே இயற்ற லோடு
சந்ததமும் வாழ்க்கையிலே ஊக்கம் என்னும்
சத்துடைமை கொண்டோங்கச் செய்வாய் ஐயா!