முருகன் App
பதினாறு பேறும் பாலிப்பாய்
ரெ. இராமசாமி
நெல்9 / 19
பதினாறு பேறும் பாலிப்பாய் · ரெ. இராமசாமி

நெல்

7✓
குன்றுதொறும் குடியிருக்கும் குமர வேலா!
குழகனெனும் கார்த்திகேயன் குகனாம் பாலா!
மன்றுநடம் ஆடுநரின் மைந்தா! கோலா!
மண்மகளின் மருமகனாம் மகிமைச் சீலா!
நன்றாக உழுதுகாய்ந்த நிலத்தில் நெல்லை
நயமாகப் பயிரிட்டுப் பயனைப் பெற்றுக்
குன்றாத நெற்கொடையைக் கொடுக்கத் தக்க
கோடிவளம் பெருகிடவே கூட்டும் ஐயா!