முருகன் App
பதினாறு பேறும் பாலிப்பாய்
ரெ. இராமசாமி
வலிமை5 / 19
பதினாறு பேறும் பாலிப்பாய் · ரெ. இராமசாமி

வலிமை

3✓
செந்நிறத்துக் கதிரவன்போல் சிவந்த மேனி
சிவனுக்கே உபதேசம் செய்த ஞானி
முந்நீர்போல் கருநீல மயிலின் தானி
முருகோனே! செய்செயலின் வலிமை பேணி
எந்நாளும் பயன்பெறவே இயற்றி மேலும்
எச்செயலும் வெற்றிகொள்ள ஊக்கம் தந்து
வன்மைமிகு பகைவனையும் வருந்த வைக்கும்
வலிமையினை வழங்கியருள் புரிவாய் ஐயா!