முருகன் App
பதினாறு பேறும் பாலிப்பாய்
ரெ. இராமசாமி
வெற்றி6 / 19
பதினாறு பேறும் பாலிப்பாய் · ரெ. இராமசாமி

வெற்றி

4✓
தொடுத்தவெட்சித் தார்சூடிச் சிவனார் சொற்ற
தொகையான பூதபடைத் தலைமை பெற்றுக்
கடுத்ததுன்பம் செய்சூரன் தன்னைச் செற்றுக்
கடுஞ்சமரில் வெற்றிகொண்ட கந்த வேலா!
எடுத்தசெயல் யாவினுமே ஈந்து வென்றி
எவ்வழக்கு நேர்ந்தாலும் இனிதே வென்று
விடுத்தசொல் எண்ணமெலாம் வெற்றி யுற்று
வீறாக வாழ்ந்திடவே விதிப்பாய் ஐயா!