முருகன் App
பதினாறு பேறும் பாலிப்பாய்
ரெ. இராமசாமி
காப்பு1 / 19
பதினாறு பேறும் பாலிப்பாய் · ரெ. இராமசாமி

காப்பு

✓
பிரணவத்தின் உருவமதாய்ப் பிறந்த நேர்த்தி
பிறஉயிர்க்குப் பெருந்தலைவன் என்னும் கீர்த்தி
அரனுமையாள் செல்வனுக்கே அருகு சார்த்தி
ஆனைமுக! அடிவணங்கி இசைத்தேன் சீர்த்தி;
பரமனுக்கே உபதேசம் பண்ணும் மூர்த்தி
பதினாறு பேறும்பா லிக்கப் பூர்த்தி
வரம்வேண்டிப் பாடிடவே வாக்குக் கோர்த்து
வடிக்கஅருள் செய்திடவே வணங்கி னேனே.